பழனி அருகே தனியார் காகித ஆலையில் வட மாநில தொழிலாளர்கள் இருவர் பலி- காகிதகூழ் தொட்டியை சுத்தம் செய்த போது விபத்து- தொட்டிக்குள் மயங்கிய இளைஞர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது உயிரிழப்பு
பழனி அடுத்த புஷ்பத்தூர் கிராமத்தில் செயல்பட்டு வருகிறது தனியார் காகித தொழிற்சாலை. இந்த தொழிற்சாலையில் பீகார் மாநிலத்தைச் சார்ந்த இளைஞர்கள் பலரும் வேலை செய்து வருகின்றனர். இன்று காகித ஆலையில் இருந்த பெரிய தொட்டிக்குள் இறங்கி பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். திடீரென இளைஞர்கள் இருவரும் தொட்டிக்குள் மயக்கம் அடைந்தனர்.
உடனடியாக அருகில் வேலை செய்தவர்கள் இளைஞர்களை மீட்டு மடத்துக்குளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இளைஞர்கள் இருவரும் உயிரிழந்தனர். இந்த நிலையில் இளைஞர்களின் உடலை பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சாமிநாதபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: ஏஐ மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்... இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி பகீர் எச்சரிக்கை...!
போலீசாரின் விசாரணையில் உயிரிழந்த இளைஞர்கள் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நூர்அலாம் (32), ராம்புரூஸ் மஞ்சூரி (35) என்பதும், காகித கூழ் நிரப்பும் தொட்டிக்குள் இறங்கி சுத்தம் செய்து கொண்டிருந்தபோது விஷவாயு தாக்கி உயிரிழந்திருக்கலாம் என்பதும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: விறுவிறு தொகுதி பங்கீடு... 5 கூட்டணி கட்சிகளுக்கு தலா 1 தொகுதி..! திமுக தலைமை முடிவு..!!