திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள பஞ்சலிங்கம் அருவி இயற்கை அழகு மற்றும் ஆன்மிகத்தின் அற்புதமான கலவையாக விளங்கும் ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகும். மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ள திருமூர்த்தி மலையில் இந்த அருவி அமைந்திருக்கிறது.
இது திருமூர்த்தி அணை மற்றும் அமணலிங்கேஸ்வரர் கோவிலுடன் இணைந்து ஒரு முழுமையான சுற்றுலா அனுபவத்தை வழங்குகிறது.பஞ்சலிங்கம் அருவி என்ற பெயர் மலையின் உச்சியில் உள்ள ஐந்து லிங்கங்கள் கொண்ட சிறிய கோவிலில் இருந்து வந்தது. புராணங்களின்படி இந்த இடத்தை அகத்திய முனிவர் வழிபட்டதாகவும் கூறப்படுகிறது. அருவியின் நீர் மூலிகை குணம் கொண்டது என நம்பப்படுவதால் பலர் இதில் குளித்து புத்துணர்வு பெறுகின்றனர். அருவி சுமார் 5 மீட்டர் உயரத்தில் இருந்து கொட்டும் நீர்வீழ்ச்சியாக உள்ளது.

சுற்றிலும் அடர்ந்த வனப்பகுதி மற்றும் மலைகள் இதன் அழகை மேலும் பெருக்குகின்றன. சிறந்த சுற்றுலா தளமாகவும் பஞ்சலிங்க அருவி விளங்குகிறது. திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆக்ரோஷமாக தண்ணீர் ஆர்ப்பரித்து பாய்வதால் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கனமழை, வெள்ளத்தால் சிதைந்த இந்தோனேசியா..!! 1000-ஐ தாண்டிய பலி எண்ணிக்கை..!!
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று இரவு முதல் பெய்த கனமழையால் அறிவியல் காற்றாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கோவில் ஊழியர்கள் சுழற்சி முறையில் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
இதையும் படிங்க: கனமழை விடுமுறையை ஈடு செய்ய நடவடிக்கை: நாளை (டிச. 6) சென்னை பள்ளிகள் செயல்படும்!