பரமக்குடியில் அனுமதி இன்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 220 பேரை போலீசார் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகா இளமனூர் கிராமம் பிளக்ஸ் போர்டு வைப்பது தொடர்பாக இரு சமுதாயத்தினர் இடையே பிரச்சனை ஏற்பட்டது. சம்பவத்தின் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது.
அனுமதி மறுத்த நிலையில் பரமக்குடி ஐந்துமுனை பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ராமநாதபுரம் டிஐஜி மூர்த்தி, எஸ்பி சந்தீஸ் ஆகியோர் தலைமையில் சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் பரமக்குடி முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் பரமக்குடி ஐந்துமுனை பகுதியில் ஒன்று கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் அனுமதி மறுக்கப்பட்டதை மீறி கோசமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு அருகில் இருந்த தனியார் மகாரில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ரூ. 20 லட்சம் வரை வைப்புத் தொகை... ரோடு ஷோ வழிகாட்டு நெறிமுறைக்கான பரிந்துரை வெளியீடு...!
ஆர்ப்பாட்டத்தின் போது போலீசாருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் ஒரு சில வாக்குவாதங்கள் ஏற்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்கள் தனியார் மண்டபத்தில் வைக்கப்பட்டபோது ஒரு பெண் இன்ஸ்பெக்டர் ஆர்ப்பாட்டக்காரர்களை தரக்குறைவாக பேசியதாக கூறப்பட்டது. இதனை அடுத்து அங்கிருந்து இன்ஸ்பெக்டர் வெளியேற்றப்பட்டு அங்கு கூடுதல் காவலர்கள் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பதற்றத்திற்கு காரணம் என்ன?
சிவகங்கை மாவட்டம் இளமனூர் என்ற இடத்தில் சமூக தலைவர்களுடைய பிளக்ஸ் பேனர் வைப்பது தொடர்பாக இருவேறு சமூகங்களுடைய மோதலானது ஏற்பட்டது. இந்த மோதலை தொடர்ந்து அதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, சத்திரக்குடி, நயனார் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் மற்றொரு தரப்பினர் வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது அவ்வழியாக வந்த மற்றொரு சமூகத்தை சேர்ந்தவர்களுடைய கார் கண்ணாடிகள் உடைத்து சேகப்படுத்தப்பட்டது.
இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்பான பதற்றமான சூழல் தொற்றிக் கொண்டுள்ளது. அதனை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட காவல் துறையினர் நிகழ்விடத்திற்கு வந்து தொடர்ச்சியாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் தொடர்பாகவும், கார் கண்ணாடிகள் உடைத்தது தொடர்பாகவும் சத்திரக்குடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, முதற்கட்டமாக ஏழு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த வழக்குப்பதிவு செய்ததன் அடிப்படையில் மேலும் சிலரை கைது செய்வதற்கான ஏற்பாட்டிலும் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மோடியின் Skincare Routine!! ஹர்லீன் தியோல் கேள்விக்கு பிரதமர் கொடுத்த ரிப்ளை!!