திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரிலிருந்து சிங்கிலிக்கம்பட்டிக்கு அரசு நகரப் பேருந்து ஒன்று சென்றது. அதில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.
அந்த பேருந்தில் எரியோடு பகுதியை சேர்ந்த கணபதிராஜா(வயது 50) என்பவர் தனியார் நூற்பாலைக்கு வேலைக்கு செல்வதற்காக ஏறியுள்ளார். அப்போது பேருந்திற்குள் நின்றிருந்த V. குரும்பபட்டியைச் சேர்ந்த சிவநாதன்(26) என்ற இளைஞர் மீது உரசியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சிவநாதன், இடித்துவிட்டு மன்னிப்பு கேட்க மாட்டியா என்று கேட்டு தாக்கியுள்ளார். மேலும் தனது இடுப்பில் வைத்திருந்த கத்தியை எடுத்து கணபதிராஜாவை குத்தியுள்ளார்.
இதையும் படிங்க: #BREAKING: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (CPM) தொகுதி பங்கீடு நிறைவு! 5 இடங்களில் போட்டி!
இதனைக்கண்ட பேருந்தில் பயணித்த பயணிகள் அனைவரும் பயத்தில் அலறினர். உடனடியாக பேருந்தில் இருந்தவர்கள் சிவநாதனை பிடித்து பேருந்துடன் சென்று வேடசந்தூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அதனைத்தொடர்ந்து கணபதிராஜாவை 108- ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சைக்கு வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
சிவநாதன் கடந்த வாரம் கையில் கத்தியுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக நடந்து கொண்டதால், போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். தற்போது ஜாமீனில் வெளியே வந்த சிவநாதன் தினமும் போலீஸ் நிலையத்திற்கு வந்து கையெழுத்து போட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அசம்பிள் பீஸ், டெல்லி மேட்... “சும்மா கிழி” - அதிமுக கூட்டணியை கலாய்த்து தள்ளிய உதயநிதி...!