அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலம் இந்தியத் தீபகற்பத்தில் வடகிழக்கு பருவமழைக் காலம் என்று குறிப்பிடுகிறது. இது பருவமழைக் காலம் என்றும் சொல்லப்படுகிறது. தென்னிந்தியத் தீபகற்பத்தின் முக்கிய மழைக்காலம் இதுவாகத்தான் உள்ளது. குறிப்பாக கிழக்குப் பகுதியான கரையோர ஆந்திரா, ராயலசீமா, தமிழ்நாடு, புதுச்சேரி ஆகியவை. தமிழ்நாட்டின் மிக முக்கிய மழைக்காலமான வடகிழக்கு பருவமழையின் போது மட்டும் வருடத்தின் மொத்த மழையளவில் 48% சராசரியாகப் பொழிகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தமிழகத்தின் கரையோரப் பகுதிகளில் 60% மழையளவும் உள்மாவட்டங்களில் 40 - 50% மழையளவும் இக்காலத்தில் பொழிகிறது என்று வானிலை நிலவர தகவல்கள் தெரிவிக்கின்றன.
தென்மேற்கு பருவ மழை கடந்த மே 24ல் துவங்கியது. இம்மழை இயல்பானதாக இருந்தது. இன்று தென்மேற்கு பருவ மழை விலகி, வடகிழக்கு பருவ மழை தொடங்கியது. இதனால் சென்னை முதல் கன்னியாகுமரி வரை பல்வேறு மாவட்டங்களிலும் மிதமானது முதல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அருவிகளிலும், ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், தரைப்பாலங்கள் மூழ்கியுள்ளன. ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் மக்கள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
வீடுகளுக்குள் புகுந்த பாம்புகள்:
கும்பகோணம் ,பாபநாசம், திருவிடைமருதூர் போன்ற இடங்களில் பெய்து வரும் கன மழையினால் குடியிருப்பு பகுதிகளை மழை நீர் சூழ்ந்தது.வீடுகளுக்குள் பாம்புகள் புகுந்தது.
இதையும் படிங்க: மழை தீவிரம் அதிகமா இருக்கு… போர்கால நடவடிக்கை எடுங்க… EPS வார்னிங்…!
கும்பகோணம் ,பாபநாசம், திருவிடைமருதூர் போன்ற பகுதிகளில் வடகிழக்கு பருவ மழை தற்போது தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் இப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கும்பகோணம் புறநகர் பகுதிகளான மகாவீர் நகர் ,டிவி நகர் ,மனோ சக்ரா நகர், உதயம் நகர் போன்ற பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளை சுற்றி மழை நீர் பெருமளவு தேங்கியுள்ளது.
இதனைப் போல திருவிடைமருதூர் அருகே உமாமகேஸ்வரபுரம், திருபுவனம்,கோகுலம் நகர் போன்ற இடங்களிலும் குடியிருப்புகளை சுற்றி மழை நீர் சூழ்ந்துள்ளது. வீடுகளைச் சுற்றி மழை நீர் பெருமளவு தேங்கி உள்ளதால் வீடுகளுக்குள் பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் புகுவது அதிகரித்துள்ளது.ராமகிருஷ்ணா நகரில் நடராஜன் என்பவருடைய வீட்டில் இரண்டு பாம்புகள் புகுந்தது இதனை தீயணைப்பு படை வீரர்கள் அகற்றினார்.
குடியிருப்புகளைச் சுற்றி தேங்கியுள்ள மழை நீர் விரைந்து வடிய ஏதுவாக அப்பகுதிகளில் உள்ள வடிகால் வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும் என்று குடியிருப்பு வாசிகள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். வீடுகளைச் சுற்றி மழை நீர் தேங்கி இருப்பதால் சுகாதார கேடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
மருத்துவமனைக்குள் புகுந்த மழைநீர்:
சிதம்பரத்தில் தொடர் மழையால் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கீழ்த்தள வார்டில் தண்ணீர் தேங்கியது. இதனால் நோயாளிகள் வேறு வார்டுக்கு மாற்றப்பட்டனர்.

சிதம்பரம், புவனகிரி சுற்று வட்டார பகுதிகளில் இன்று காலை முதலே பரவலாகவ மழை பெய்து வருகிறது. அவ்வப்போது விட்டு, விட்டு பெய்து வரும் மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே சிதம்பரத்தை அடுத்த அண்ணாமலைநகரில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தண்ணீர் தேங்கியது. இதன் காரணமாக தரைத்தளத்தில் உள்ள ஒரு சில நோயாளிகள் தங்கிய வார்டில் லேசாக தண்ணீர் புகுந்தது.
தண்ணீர் உள்ளே புகுந்ததால் நோயாளிகள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கீழ்தளத்தில் இருந்த சில நோயாளிகள் முதல் தளத்திற்கு மாற்றப்பட உள்ளனர்.
இதையும் படிங்க: சூறையாடும் மழை... முகாம்களை தயார் செய்யுங்க... முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்...!