• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, April 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பிளாஸ்டிக் பக்கெட், பாட்டில்களுடன் சாரை சாரையாய் படையெடுக்கும் மக்கள்... திரும்பிய திசையெல்லாம் திண்டாட்டம்... திணறும் தமிழகம்...!

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதாலும், பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்படும் என தகவல் பரவி வருகிறது.
    Author By Amaravathi Thu, 12 Mar 2026 11:11:21 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    petrol-deiseal-scarcity-in-tamilnadu

    ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றத்தால், முக்கிய விநியோகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி முடங்கி, உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.  இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதாலும், பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்படும் என தகவல் பரவி வருகிறது. இந்த அச்சத்தின் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு முதல் பெட்ரோல் பங்குகளில் வாகன ஓட்டிகள் பெட்ரோலை நிரப்பி வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எட்டயாபுரம் சாலையில் உள்ள இரு பெட்ரோல் பங்கு பெட்ரோல் இல்லாமல் மூடப்பட்டுள்ளது மேலும் அங்கு வரும் வாகன ஓட்டிகள் திரும்பி செல்கின்றனர். பெட்ரோல் பங்குகளை தேடி வாகன ஓட்டிகள் அலைகின்றனர்.

    கும்பகோணம் நகரில் நேற்று இரவில் இருந்து பெட்ரோல் பங்குகளில் ஏராளமான வாகன ஓட்டிகள் பெட்ரோல் நிரப்ப குவிந்ததால் பரபரப்பான சூழல் நிலவுகிறது.  பெட்ரோல் கிடைக்காது என்றும் பெட்ரோல் விலை பல மடங்கு உயரும் என்று பரவும் வதந்திகளால் பொதுமக்கள் குடிநீர் பாட்டில்கள், வாளிகள், என கிடைக்கும் பொருட்களில் பெட்ரோலை வாங்கி செல்கின்றனர். கும்பகோணம் நகரில் இன்று காலை பெட்ரோல் பங்க் திறப்பதற்கு முன்பே ஏராளமான வாகன ஓட்டிகள் பெட்ரோல் பங்கில் காத்திருந்தனர்.

    மயிலாடுதுறையில் பெட்ரோல் தட்டுப்பாடு வரப்போகிறது என இரவு திடீரென பரவிய வதந்தியின் காரணமாக பெட்ரோல் பங்குகளின் முன்பு பொதுமக்கள் இரண்டு சக்கர வாகனங்கள், ஆட்டோ மற்றும் கார்களில் பெட்ரோல் டீசல் நிரப்புவதற்காக அதிக அளவில் குவிந்தனர். பெட்ரோல் பங்குகளில் முன்பு பெட்ரோல் ரீ-ஃபில் செய்வதற்காக டேங்கர் லாரிகள் வந்து நின்றதையும் நம்பாத பொதுமக்கள் உடனடியாக தங்கள் வாகனத்துக்கு எரிபொருள் நிரப்ப வேண்டும் என முண்டியடித்துக் கொண்டு பெட்ரோல் பங்குகளை நெருங்கியதால் பங்குகளில் முன்பு நெரிசல் நிலவியது. 

    இதையும் படிங்க: ஈரான் - இஸ்ரேல் போர் எதிரொலி: பைக்கு 2 லிட்டர்; காருக்கு 10 லிட்டர் - பெட்ரோல், டீசல் விநியோகத்திற்கு புதிய கட்டுப்பாடு...! 

    உளுந்தூர்பேட்டை பகுதி பெட்ரோல் பங்குகளில் குவியும் வாகன ஓட்டுநர்கள், பொதுமக்களுக்கு கேன்களில் வழங்க தடை விதிக்கப்பட்டதோடு, வாகனங்களில் வருபவருக்கு மட்டுமே பெட்ரோல் டீசல் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு முதல் பெட்ரோல் பங்குகளில் வாகன ஓட்டுநர்கள் குவிந்து தங்களுக்கு தேவையான பெட்ரோல், டீசலை போட்டு செல்கின்றனர். இந்த நிலையில் தட்டுப்பாடு ஏற்பட்டால் பெட்ரோல், டீசல் கிடைக்காது என கிராமப்புறங்களில் இருந்து வருபவர்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் கேன்களில் கொண்டு வந்து பெட்ரோல், டீசல் வாங்குவதால் இதற்கு பங்க் உரிமையாளர்கள் வாகனங்களில் வந்தால் மட்டுமே பெட்ரோல், டீசல் வழங்கப்படும் என்றும் கேன்களில் வழங்கப்படாது என திருப்பி அனுப்பப்பட்டு வருகிறனர்.

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் பெட்ரோல், டீசல்  விலை உயர்வு மற்றும் தட்டுபாடு என  வதந்தி பரவியதால் நள்ளிரவில் நகரில்  உள்ள பெட்ரோல் பங்கில்  100க்கு மேற்பட்ட மக்கள் இருசக்கர வாகனம்,கார், பேருந்து, சரக்கு வாகனம் ,ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் போட்டி போட்டுக் கொண்டு  பெட்ரோல் போட்டு சென்றனர். பெண்கள் நள்ளிரவிலும் 5,10,25,50 லிட்டர் கேன்களில் பெட்ரோல்களை வரிசையில் நின்று வாங்கிச் சென்றனர். இதனால் வந்தவாசியில் நள்ளிரவு 2 மணி வரை பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

    விழுப்புரம், விக்கிரவாண்டி, உள்ளிட்ட பல்வேறு பெட்ரோல் பங்க் நிலையங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் பெட்ரோல் பங்க்குகளில் அதிகளவு குவிந்து இருசக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பி கொண்டும், கேன்களில் பெட்ரோலை வாங்கி சென்றனர். இதனால் பெட்ரோல் பங்குகளில் ஊழியர்கள் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்ப முடியாமல் அவதிக்குள்ளாகினர். இருசக்கர வாகனங்கள் பொதுமக்கள் குவிந்ததால் பெட்ரோல் நிலையங்களில் நீண்ட நேரம் காத்திருந்து பெட்ரோலை நிரப்பி சென்றனர். இதேபோல் கோவில்பட்டியிலும் பல்வேறு பெட்ரோல் பங்குகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெட்ரோலை வாங்கிச் சென்றனர். இதனால் பெட்ரோல் காலியானதால் நிறைய பங்குகள் மூடப்பட்டன.  

    இதையும் படிங்க: Indane வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு..!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் இதோ..!!

    மேலும் படிங்க
    பெண்கள் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது! பொள்ளாச்சி ஸ்டிக்கர் விவகாரத்தில் தவெக தலைவர் விஜய் ஆவேசம்!

    பெண்கள் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது! பொள்ளாச்சி ஸ்டிக்கர் விவகாரத்தில் தவெக தலைவர் விஜய் ஆவேசம்!

    தமிழ்நாடு
    2026 சட்டமன்றத் தேர்தல் ... திமுக தலைமையிலான கூட்டணிக்கு NRPI ஆதரவு..!

    2026 சட்டமன்றத் தேர்தல் ... திமுக தலைமையிலான கூட்டணிக்கு NRPI ஆதரவு..!

    தமிழ்நாடு
    தருமபுரியில் விஜய் ROAD SHOW நடத்த அனுமதி மறுப்பு..! தொண்டர்கள் ஏமாற்றம்..!!

    தருமபுரியில் விஜய் ROAD SHOW நடத்த அனுமதி மறுப்பு..! தொண்டர்கள் ஏமாற்றம்..!!

    தமிழ்நாடு
    மதுராவை உலுக்கிய சோக சம்பவம்..!! படகு விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு..!!

    மதுராவை உலுக்கிய சோக சம்பவம்..!! படகு விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு..!!

    இந்தியா
    உடல்நலம் தேறி வருகிறேன், விரைவில் களத்திற்குத் திரும்புவேன்! வானதி சீனிவாசன் உருக்கமான வீடியோ!

    உடல்நலம் தேறி வருகிறேன், விரைவில் களத்திற்குத் திரும்புவேன்! வானதி சீனிவாசன் உருக்கமான வீடியோ!

    தமிழ்நாடு
    அமமுகவினர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் TVKவில் ஐக்கியம்..! காரைக்குடி வேட்பாளர் முன்னிலையில் இணைவு..!

    அமமுகவினர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் TVKவில் ஐக்கியம்..! காரைக்குடி வேட்பாளர் முன்னிலையில் இணைவு..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share