தமிழகத்தின் பிரதான தொழில்களில் ஒன்று தென்னை விவசாயம். 29 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கரில் தென்னை விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது வெள்ளை ஈ மற்றும் வாடல் நோய் தாக்குதல் அதிகரித்து வருவதன் காரணமாக கடந்த ஓராண்டு காலமாகவே தென்னை மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டு வருவது வேதனையின் உச்சம். பெரும் நஷ்டத்தை சந்தித்து வரும் விவசாயிகள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.
இதன் காரணமாக இளநீர் மற்றும் தேங்காய் விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த நோய் தாக்குதல் மேற்கு மாவட்டங்கள் மற்றும் தெற்கு மாவட்டங்களில் சற்று அதிகரித்து உள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், தென்னை விவசாயிகளுக்கு பிரதமர் மோடி அரசு தோள் கொடுக்கும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மில்லிங் கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதார விலையைக் குவிண்டாலுக்கு ரூ. 445-ம், பால் கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதார விலையைக் குவிண்டாலுக்கு ரூ. 400-ம் உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: அதிரும் அரசியல் களம்...!! மீண்டும் NDA கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி... நயினார் நாகேந்திரன் எடுத்த அதிரடி முடிவு....!
வெள்ளை ஈ தாக்குதலாலும், வாடல் நோயாலும் பரிதவித்து வரும் தென்னை விவசாயிகளின் துயர் துடைத்து, அவர்களின் நல்வாழ்வுக்கு வழிவகுக்கும் வண்ணம் கொப்பரைத் தேங்காய்க்கான ஆதார விலையை உயர்த்திய பிரதமர் மோடிக்கு, தமிழக விவசாயிகள் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.
இதையும் படிங்க: திமுக அரசால் சொல்லில் அடங்காத துயரம்... விவசாயிகளுக்காக குரல் கொடுத்த நயினார்...!