தூத்துக்குடியில் ரூ.4900 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி. தூத்துக்குடியின் விமான நிலையத்தின் புதிய முனையமும் திறந்து வைக்கப்பட்டது. தூத்துக்குடி விழா மேடையில் பிரதமர் மோடி வணக்கம் என கூறி தமிழில் உரையை தொடங்கினார். அதை தொடர்ந்து மேடையில் ஆளுநர் ஆர்.என்.ரவி, நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோரை வரவேற்றார். வெளிநாட்டு பயணத்தை முடித்து கொண்டு ராமர் மண்ணில் கால் பதித்தது மகிழ்ச்சி. தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டும் செல்லும் பயணம் 2014 ஆம் ஆண்டு தொடங்கியது. திருச்செந்தூர் முருகன் ஆசியோடு தூத்துக்குடியில் வளர்ச்சி பணிகள் தொடங்கப்பட்டுள்ளது என்றார்.
விமானம், துறைமுகம் திட்டங்களுடன் எரி சக்தியின் முக்கிய திட்டங்களும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. கடந்த 11 ஆண்டுகளில் உட்கட்டமைப்பு, எரிசக்தி துறைகளில் தமிழ்நாட்டில் பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஆழ்கடல் பகுதியில் கப்பல்களை செலுத்தி ஆங்கிலேயர்களுக்கு சவால் விட்டவர் வ.உ.சி. சுதந்திரமான பாரத கவை உருவாக்கியவர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன், அழகுமுத்துகோன். பாரதிக்கு தூத்துக்குடியுடன் உள்ள உறவு, எனது சொந்த தொகுதியான காசிக்கும் உண்டு. பில்கேட்ஸூக்கு தூத்துக்குடியின் முத்துக்களை பரிசாக கடந்த ஆண்டு வழங்கியது இன்றும் என் நினைவில் உள்ளது. பாண்டிய நாட்டின் சுத்தமான முத்துக்கள் உலக பொருளாதாரத்தின் அடையாளமாக இருந்தன. இங்கிலாந்து உடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவின் பொருளாதாரத்திற்கு புதிய உத்வேகம் அளிக்கும் என்றார்.
ஆபரேஷன் சிந்தூரின் போது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களின் பலத்தை கண்கூடமாக பார்த்திருப்பீர்கள். தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசு முழுமையமாக நடவடிக்கை எடுத்து வருகிறது எனக்கூறிய பிரதமர் மோடி, தூத்துக்குடி விமான நிலையம் மேம்படுத்தப்பட்டு உள்ளதால் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். ரூ.2500 கோடி மதிப்பிலான சாலை வசதி திட்டங்களை தமிழகத்திற்கு கொடுத்துள்ளோம். புதிய சாலைகள் மூலம் தூத்துக்குடி துறைமுகம் மேம்படும். தமிழகத்தில் 77 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன எனக்கூறினார்.
இதையும் படிங்க: வெள்ளை வேட்டி சட்டையில் கலக்கலாக வந்த பிரதமர் மோடி..!! புதிய முனையக் கட்டடம் திறந்து வைப்பு..!
தேசத்தின் முதல் தனித்தன்மை வாய்ந்த செங்குத்து தூக்குப் பாலம் தமிழ்நாட்டில் தான் உள்ளது. தேசத்தின் நீண்ட கடல் பாலம் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டது. இந்திய நாட்டை நவீனப்படுத்தும் மாபெரும் வேள்வி நடைபெற்று வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்திற்கு 3 லட்சம் கோடி ரூபாய் நிதியாக கொடுத்துள்ளோம். இது முந்தைய அரசை விட 3 மடங்கு அதிகமாகும். தமிழகத்தில் 11 ஆண்டுகளில் 11 மருத்துவ கல்லூரிகளை கொடுத்துள்ளோம்
இதையும் படிங்க: மருத்துவர்கள் வற்புறுத்தினாலும் எனக்கு இங்கு ஓய்வெடுக்க மனமில்லை.. முதல்வர் மு.க ஸ்டாலின் உருக்கம்..!!