காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழ்நாட்டுக்கு உரிய பங்கை உறுதி செய்வதற்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர தமிழக அரசு எடுத்துள்ள முடிவை பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் வரவேற்றுள்ளார். இந்த முடிவு தாமதமாக எடுக்கப்பட்டிருந்தாலும், தற்போதைய சூழலில் அதுவே சரியான நடவடிக்கை என்று அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு முதலில் காவிரி நீர் பகிர்வு மற்றும் மேகதாது அணை தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமாருடன் பெங்களூரில் பேச்சுவார்த்தை நடத்த முதலமைச்சர் விஜய் செல்வதாக அறிவித்திருந்தது. ஆனால் தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு எழுந்ததும், கர்நாடகத்தில் போராட்டங்கள் தீவிரமடைந்ததும் காரணமாக, இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு உகந்த சூழல் இல்லை என கர்நாடக முதலமைச்சர் அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து தமிழக அரசு அந்த திட்டத்தை கைவிட்டு, காவிரியில் தமிழ்நாட்டுக்கு உரிய நீரை உடனடியாக திறந்துவிடக் கோரி உச்சநீதிமன்றத்தை அணுகுவதாக சட்ட அமைச்சர் நிர்மல்குமார் அறிவித்தார். ஆகஸ்ட் 5-க்குப் பிறகு இந்த வழக்கு தாக்கல் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: பிரதமரை கேட்க தைரியம் இருக்கா..? ராகுலுக்கு சவால்... அன்புமணியை விளாசிய மாணிக்கம் தாகூர்..!!
இந்த முடிவை வரவேற்ற அன்புமணி, தமிழக அரசு முதலில் தவறான பாதையில் சென்றதாகவும், இப்போது சரியான பாதைக்கு திரும்பியிருப்பது மனநிறைவு அளிப்பதாகவும் குறிப்பிட்டார். காவிரி நீர் பகிர்வு அல்லது மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுடன் எந்த வகையிலும் பேச்சுவார்த்தை நடத்தாதென்ற உறுதியான கொள்கை முடிவை தமிழக அரசு இனிமேல் எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: ராகுல் பேசட்டும்... கூட்டணியை உடைக்கத் தயார்... காவிரி விவகாரத்தில் அன்புமணி ஆவேசம்..!!