பாட்டாளி மக்கள் கட்சியின் (பா.ம.க.) நிறுவனர் ராமதாஸ் அவர்கள் தொடர்ந்த வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் இன்று முடித்து வைத்துள்ளது. அங்கீகரிக்கப்படாத கட்சியின் தலைமை உரிமை கோரல் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க முடியாது என்றும், வழக்கைச் சம்பந்தப்பட்ட சிவில் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அங்கீகரிக்கப்படாத கட்சியைப் பொறுத்தவரை, தேர்தல் ஆணையம் கட்சியின் உள் விவகாரங்களில் தலையிட்டு முடிவெடுக்க முடியாது. கடிதங்களின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க முடியாது.
அங்கீகரிக்கப்படாத கட்சியின் உரிமை கோரல் விவகாரத்தில் ஒரு சாராரின் கருத்தைப் பெற்று தேர்தல் ஆணையம் முடிவெடுக்க முடியாது, அது தேர்தல் ஆணையத்தின் அதிகார வரம்புக்குள் வராது. அடுத்த கட்ட நடவடிக்கை: கட்சி உரிமை கோரல் விவகாரத்தில் சிவில் நீதிமன்றத்தை அணுக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: பா.ம.க.வின் மாம்பழம் சின்னம் முடக்கப்படுகிறதா? - தேர்தல் ஆணையம் விளக்கம்!
முன்னதாக, பா.ம.க.வின் தலைவர் பதவி குறித்துத் தலைமைப் பிரச்சினை ஏற்பட்ட நிலையில், நிறுவனர் ராமதாஸ் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். தற்போது அந்த வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.
இதையும் படிங்க: பா.ம.க.வின் மாம்பழம் சின்னம் முடக்கப்படுகிறதா? - தேர்தல் ஆணையம் விளக்கம்!