2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளாவில் சட்டமன்ற பொது தேர்தல்கள் நடைபெற இருக்கின்றன. தமிழகத்தை பொறுத்தவரை பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை மும்முறமாக செய்து வருகின்றன. மக்கள் சந்திப்பு, பொதுக் கூட்டங்கள், செயற்குழு கூட்டங்கள் என முனைப்பு காட்டி வருகின்றன. கட்சியின் பலத்தை நிரூபிக்கும் வகையில் முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.
2026 ஆம் ஆண்டு ஆட்சி அரியணையில் ஏறுவதை உறுதி செய்வதற்காக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஈடுபட்டுள்ளன. ஆட்சியை தக்க வைப்பதற்காக திமுக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல்கள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ளன.

இந்தத் தேர்தல்களில் தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் உள்ள தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புவோரிடமிருந்து வரும் 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் 20 ஆம் தேதி சனிக்கிழமை வரை ஒரு வாரத்திற்கு விருப்ப மனுக்கள் எனப்படும் என அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: விரைவில் மெகா கூட்டணி… திமுகவுக்கு தைரியம் இல்ல… அன்புமணி சரமாரி விளாசல்…!
சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலை பனையூரில் உள்ள அலுவலகத்தில் தினமும் காலை 11.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை விருப்ப மனுக்கள் பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டியிட விருப்பம் தெரிவிப்பதற்கான விண்ணப்பங்களை வாங்குபவர்கள் விண்ணப்பிக்க கடைசி நாளான திசம்பர் 20-ஆம் தேதி மாலை 6.00 மணிக்குள் விண்ணப்பத்தில் உள்ள விவரங்களை நிரப்பி, பனையூர் அலுவலகத்தில் தலைமை நிலைய நிர்வாகிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "அம்மாவை பாட்டிலால் அடிப்பவருக்கு திமுகவை விமர்சிக்க அருகதை இருக்கா?".. அன்புமணியை விளாசிய ஆர். எஸ்.பாரதி...!!