பா.ம.க.வில் தந்தை- மகனுக்கு இடையே மோதல் முற்றி வருகிறது. இதனால் இருவரும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றனர். இதனிடையே, அன்புமணி தரப்பு நிர்வாகிகளை ராமதாஸ் நீக்கி வருகிறார். முகுந்தனை கட்சி பொறுப்பில் கொண்டு வந்ததில் தொடங்கிய பிரச்சனை இன்று வரை ஓயவில்லை. இன்று சரியாகும் நாளை சரியாகும் என காத்திருந்த தொண்டர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இது அரசியல் உத்தியாகவும் பார்க்கப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அன்புமணி பொதுக்குழு கூட்டம் நடத்தி இருந்தார். இதில் அன்புமணி தரப்பு ஆதரவாளர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இதற்கிடையே, நேற்று புதிய நிர்வாக குழுவினருடன் பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார். அப்போது, ஜி.கே.மணி, முரளி சங்கர், கரூர் பாஸ்கர், அருள், பரந்தாமன், சிவபிரகாசம், தீரன், புதா.அருள்மொழி உள்ளிட்டோரை புதிய நிர்வாகிகளாக நியமனம் செய்தார்.
இதையும் படிங்க: அன்புமணி சைடு ஆல் விக்கெட் அவுட்... ஒரே பந்தில் ஜோலியை முடிச்ச ராமதாஸ்...!

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தலைமையில் ஓமந்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வரும் 8 ஆம் தேதி மாநில செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பா.ம.க. நிர்வாகக்குழுவில் இருந்து அன்புமணியை நீக்கி ராமதாஸ் உத்தரவிட்டார். மேலும், 21 பேர் கொண்ட புதிய பொறுப்பாளர் பட்டியலை அவர் வெளியிட்டுள்ளார்.

ராமதாஸ், பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி, சிவப்பிரகாசம், பு.தா. அருள்மொழி, தீரன், திருக்கச்சூர் ஆறுமுகம், ஏ.கே. மூர்த்தி, முரளி சங்கர், சையது மன்சூர் உசேன், துரை கவுண்டர், அருள், நெடுங்கீரன், கவிஞர் ஜெய பாஸ்கரன், முத்து குமரன், வைத்தியலிங்கம், அன்பழகன், பரந்தாமன், ம.க ஸ்டாலின், கரூர் பாஸ்கரன், சுஜாதா கருணாகரன், சரவணன் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர். இப்படி மாறி மாறி கட்சி நிர்வாகிகளை மாற்றி வருவது தொண்டர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அடுத்தவங்க சொன்னா அப்படியே கேட்போமா? எல்லாம் எங்களுக்கு தெரியும்.. ஜி.கே மணி கொந்தளிப்பு..!