டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ.க்களை பேரம் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்ற உத்தரவின்படி தினமும் காவல் நிலையத்தில் ஆஜராகி வந்த செந்தில் பாலாஜி இன்று ஆஜராகவில்லை. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக போலீசார் செந்தில் பாலாஜியை தேடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவர் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டாஸ்மாக் முறைகேடு வழக்கில் தாக்கல் செய்யப்பட்டிருந்த முன்ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ.க்களை பேரம் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்ற உத்தரவின்படி திருவள்ளித்தணி காவல் நிலையத்தில் இன்று ஆஜராகுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், செந்தில் பாலாஜி காவல் நிலையத்தில் ஆஜராகவில்லை. அவருக்குப் பதிலாக அவரது சகோதரர் அசோக் மட்டும் காவல் நிலையத்தில் ஆஜராகி, இது தொடர்பான தகவல்களை போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: காய் நகர்த்திய விஜய்... அவசர, அவசரமாக செந்தில் பாலாஜி எடுத்த அதிரடி முடிவு...!
செந்தில் பாலாஜி ஏன் ஆஜராகவில்லை என்று போலீசார் கேட்டபோது, உடல்நலக்குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று அவரது சகோதரர் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் வழக்கமாக தங்கியிருந்த ஓட்டலிலும் தங்காமல் இருந்ததாகவும், பின்னர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் செந்தில் பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவரை கைது செய்வதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள சூழலில், இந்த உடல்நலக்குறைவு தொடர்பான தகவல் வெளிவந்துள்ளது. இதற்கிடையில், தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ.க்களை பேரம் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்ற உத்தரவின்படி தினந்தோறும் திருவள்ளித்தணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வந்த செந்தில் பாலாஜி, இன்று ஆஜராகாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: கொத்து கொத்தாய் சிக்கிய முக்கிய ஆவணங்கள்... டாஸ்மாக் வழக்கில் செந்தில் பாலாஜிக்கு இறுகும் பிடி...!