தமிழக வெற்றிக்கழக கட்சி தலைவரும் நடிகருமான விஜய் தன்னுடைய 69ஆவது படத்தின் படப்பிடிப்பிற்காக கொடைக்கானல் அருகே உள்ள தாண்டிகுடி பகுதிக்கு உள்ள கன்னிமாதுரை என்ற பகுதியில் படப்பிடிப்பு மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது. இதற்காக சென்னையில் இருந்து அவர் விமானம் மூலம் மதுரை வருவதையொட்டி விஜய்யை பார்க்க, காலை முதலே அவரது கட்சியினர், ரசிகர்கள் மதுரை விமான நிலைய பகுதியில் திரண்டனர். அவர்கள் விமான நிலையத்திற்குள் நுழைய முயன்றனர். தடுப்பு வேலிகளை அமைத்து போலீஸார் அவர்களை தடுத்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

மே 1ம் தேதி மதியம் 2 மணிக்கு மேல் மீண்டும் விமான நிலைய பகுதியில் தவெகவினர், ரசிகர்கள் கூடினர். அவர்கள் விமான நிலைய முன்பகுதிக்கு செல்ல முண்டியடித்தனர். போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்திய நிலையில், குறிப்பிட்ட நிர்வாகிகள் மட்டும் விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதன் காரணமாக விமான நிலையத்திற்கு வெளியில் பெருங்குடி அம்பேத்கர் சிலை வரையிலும் சாலைகளில் விஜய் ரசிகர்கள் காத்திருந்தது விஜய்க்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
இதையும் படிங்க: பாஜகவுடன் தவெக கூட்டணியா? சந்தேகங்களை கிளப்பும் நயினார் நாகேந்திரன் பேட்டி!!

இதனால் பொதுமக்கள் கடும் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட சிரமங்களுக்கு ஆளான நிலையில், இப்படி விஜயை முண்டியடித்துக்கொண்டு பார்த்த தவெக தொண்டர்களில் ஒருவரான காவலருக்கு வேலை பறிபோயுள்ளது. மதுரை மாநகர் தெப்பக்குளம் குற்றப்பிரிவு காவலரான கதிரவன் மார்க்ஸ் என்பவர் விளக்குத்துாண் காவல்நிலையத்தில் ம. நேற்றுமுன்தினம் மதியம் மீனாட்சி அம்மன் கோயில் பகுதியில் சித்திரைத்திருவிழா பாதுகாப்பு பணி ஒதுக்கப்பட்டிருந்தது.

அந்த நேரத்தில் சினிமா படப்பிடிப்பிற்காக மதுரை விமான நிலையம் வந்த த.வெ.க., தலைவர் விஜய் பார்ப்பதற்காக பணி நேரத்தில் அவசரகால அனுமதி கேட்டு சென்ற அவர் சீருடை இல்லாமல் கட்சிக்கொடியை அணிந்தபடி விஜய்யை வரவேற்ற வீடியோ வெளியான நிலையில் காவலர் கதிரவன் மார்க்ஸை பணியிடை நீக்கம் செய்து மாநகர காவல் ஆணையர் லோகநாதன் நடவடிக்கை.
இதையும் படிங்க: TVK...TVK... காற்றில் பறந்த விஜயின் அட்வைஸ்.. சொல் பேச்சை கேட்காமல் ரசிகர்கள் அலப்பறை..!