வாக்காளர்கள் எளிதில் வாக்களிக்க வாக்குச்சாவடி மையத்தில் கலர் கோடுகள் போடப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதியான நாளை ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களுடைய கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்டவற்றை முடித்து வேட்பாளர்களை அறிவித்தனர்.
தொடர்ந்து தேர்தல் பிரச்சாரங்களை மும்முரமாக நடத்தி வந்தனர். திமுக, அதிமுக என் பல கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரங்களை மிக தீவிரமாக மேற்கொண்டு வந்தனர். பிரச்சாரங்கள் ஓய்ந்த நிலையில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குப்பதிவு மையங்களில் நடைபெறும் குழப்பங்களை தவிர்ப்பதற்காக புது முயற்சி மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் 3079 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன 24 லட்சம் பேர் இந்த முறை வாக்களிக்க உள்ளனர். இந்நிலையில் வாக்களிக்கும் வாக்காளர்கள் எளிதாக வாக்களிப்பதற்காக பல்வேறு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. குறிப்பாக பல பள்ளிகளில் ஒரே இடத்தில் பத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி மையங்கள் இருப்பதால் வாக்களிக்கக் கூடிய மக்கள் குழப்பம் ஏற்படுகிறது.
இதையும் படிங்க: வனத்துக்குள் வாக்குப்பதிவு... 5 பேர் விரல்களில் மை வைக்க 75 கி.மீ. பயணிக்கும் அதிகாரிகள் - எங்கு தெரியுமா?
இதனை தவிர்ப்பதற்காக ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திற்கும் தனியாக கலர் கோடுகள் போடப்பட்டுள்ளன. வாக்காளர்கள் மெட்ரோ ரயில் போன்று தங்களுக்கான கலர்களை பின் தொடர்ந்து சென்றால் நேரடியாக தங்களுடைய வாக்குப்பதிவு மையத்திற்கு சென்று விடலாம். இந்த எளிய முறையை இந்த இந்த தேர்தலில் தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: வாக்களிப்பதை கட்டாயமாக்க முடியாது! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!