இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் மூன்றாவது நாள் அமர்வு தொடங்கியுள்ள நிலையில், முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இது தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாகக் கருதப்படுகிறது, ஏனெனில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து, அரை நூற்றாண்டுக்கும் மேலாக நீடித்த திராவிடக் கட்சிகளின் மாற்று ஆட்சி முறையை உடைத்து புதிய அரசியல் சூழலை உருவாக்கியுள்ளது.
108 இடங்களில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்ற நிலையில் பெரும்பான்மை நிரூபிக்க 118 இடங்கள் தேவைப்பட்டது. தமிழக வெற்றி கழகம் அரசுக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பு என்று சட்டமன்றத்தில் நடைபெறுகிறது. சட்டமன்றத்தில் பேசிய எம்எல்ஏ பிரேமலதா விஜயகாந்த் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

தமிழக வெற்றி கழகம் தனது ஆட்சியை தக்க வைக்க குதிரை பேரம் நடத்தியதாக வரும் குற்றச்சாட்டுகள் வேதனை அளிப்பதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். முதல்வர் விஜய்யை சந்திக்க அன்று முகத்தை மூடி வந்தவர் யார் என்பதை முதல்வர் விஜய் தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: பரபரப்பான அரசியல் சூழல்... முதல்வராக தொடர்வாரா விஜய்..? தொடங்கியது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
முதலமைச்சரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர் ரிக்கி ராஜன் பண்டிட் நியமனம் செய்யப்பட்டதற்கு பிரேமலதா கண்டனம் தெரிவித்துள்ளார். உங்களுக்கு ராஜகுருவாக இருந்தவரை அரசின் உயர் பணியில் அமர்த்தியது ஏன் என்பதை முதல்வர் விஜய் விளக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார். தமிழக வெற்றி கழகத்தின் அரசு வெளியிட்ட அறிவிப்புகளை பாராட்டிய பிரேமலதா விஜயகாந்த் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை சட்டசபையில் முன் வைத்துள்ளார்.
இதையும் படிங்க: புதிய முதல்வருக்கு அக்னி பரீட்சை..! என்ன செய்யணும்..! தவெக MLA- க்களுக்கு பயிற்சி.!