2026 சட்டமன்ற தேர்தலையொட்டி செப்டம்பர் 13ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 20ஆம் தேதி வரை விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். செப்டம்பர் 13-இல் திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களிலும் செப்டம்பர் 20 ஆம் தேதி நாகை, திருவாரூர், மயிலாடுதுறையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். செப்டம்பர் 27ஆம் தேதி வடசென்னை மற்றும் திருவள்ளூரில் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அக்டோபர் 4 மற்றும் ஐந்தாம் தேதிகளில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோட்டில் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
அக்டோபர் 11ல் குமரி நெல்லை தூத்துக்குடி அக்டோபர் 18ல் காஞ்சி வேலூர் ராணிப்பேட்டையில் விஜய் சுற்றுப்பயணம் நடத்துகிறார். அக்டோபர் 25ல் தென் சென்னை, செங்கல்பட்டு, நவம்பர் 11ல் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூரில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். மேலும், நவம்பர் எட்டாம் தேதி திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரத்தில் சுற்றுப்பயணம் நடத்துகிறார். நவம்பர் 15ஆம் தேதி தென்காசி, விருதுநகர் மாவட்டங்களிலும் 22 ஆம் தேதி கடலூர், 29ஆம் தேதி சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 15 சனிக்கிழமைகள் மற்றும் ஒரு ஞாயிற்றுக்கிழமைகளில் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


விஜயின் சுற்றுப்பயணத்திற்கு பல்வேறு நெருக்கடி வருவதாக கூறப்படுகிறது. அனுமதி வழங்குவதில் தொடங்கி பல்வேறு விவகாரங்களில் பிரச்சனை நிலவுகிறது. இந்த நிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் இருக்கும் என்றும் அதேபோன்று விஜய் கட்சி ஆரம்பித்து இருக்கிறார் அவருக்கு எப்படி பேச வேண்டும் என்பது தெரியாதா என கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: வரலாறு படிங்க விஜய்... ஏதோ தியாகி போல! சிபிஎம் சண்முகம் விளாசல்
அவரை குறை சொல்லவோ, விமர்சனம் செய்யவோ, ஆலோசனை சொல்லவோ நாங்கள் இல்லை என்றும், அவர் அவருக்கான ஸ்டைலில் பேசி இருக்கிறார் எனவும் தெரிவித்தார். இப்போது விஜய்க்கு இருக்கும் நெருக்கடியை போன்று 20 வருடத்திற்கு முன்பே சந்தித்தவர் விஜயகாந்த் என்றும் புதிதாக வருபவர்களுக்கு எல்லா சவால்களும் இருக்கும் என்றும் கூறினார். சவால்களை முறியடித்து வெற்றி காணும் போது தான் அது மக்களால் அங்கீரிக்கப்படும் என கூறிய அவர், திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வருபவர்கள் பிரபலமானவர்கள் என்பதால் தான் நெருக்கடிகள் அதிகம் என்றார். நாங்கள் அதையெல்லாம் பார்த்தவர்கள் தான் என்றும் இவை எங்களுக்கு பெரிதல்ல என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மறுபடியுமா! விஜய் விட நயன்தாரா வந்தா கூட்டம் இன்னும் அள்ளும்… சீமான் செம்ம கலாய்