தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் உள்ள பாரப்பத்தியில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. நடக்கும் இந்த மாநாட்டில் அலை கடலென தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இலட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் தனது உரையை நிகழ்த்தினார். அப்போது, வீரம் விளையும் மதுரை மா மண்ணை வணங்குவதாக தெரிவித்தார். தனக்கு எம்ஜிஆர் உடன் பழகும் வாய்ப்பு கிடைக்கவில்லை ஆனால் விஜயகாந்துடன் பழகும் வாய்ப்பு அதிகமாக கிடைத்ததாக தெரிவித்தார். மேலும், விஜயகாந்தை எனது அண்ணன் என குறிப்பிட்ட பேசினார்.
இந்த நிலையில், பிரேமலதா விஜயகாந்த் தனது கருத்தை பகிர்ந்துள்ளார். உள்ளம் தேடி இல்லம் நாடி என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார் பிரேமலதா. அதன்படி அவர் நேற்று கடலூர் மாவட்டம், பண்ருட்டி சென்று பிரச்சாரம் செய்தார்.
இதையும் படிங்க: விஜயகாந்த் இருந்தப்பவே முதுகுல குத்துனாங்க! பிரேமலதா ஆதங்கம்..!

வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் பண்ருட்டி தொகுதியில் மகத்தான வெற்றியை தர வேண்டும் என்றும் தேர்தலின் போது மகத்தான கூட்டணி, மகத்தான வேட்பாளருடன் வருவேன் எனவும் மக்கள் தேமுதிகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜயகாந்த் தனது அண்ணன் என்று விஜய் குறிப்பிட்டு பேசியதை பற்றி விளக்கம் அளித்தார். விஜய் எங்களுக்கு தம்பி தான் என்றும் இது அரசியலுக்குப் பிறகு வந்தது அல்ல என்றும் கூறினார். விஜயகாந்த் திரைத்துறையில் வந்ததில் இருந்து தொடர்கிறது என்றும் தே.மு.தி.க. தற்போது எந்த கட்சியுடனும் கூட்டணியில் இல்லை எனவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: அரசியல்லாம் இல்ல! 100% நட்பு ரீதியான சந்திப்பு... பிரேமலதா விஜயகாந்த் பேட்டி..!