தருமபுரியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்ந்த நந்தினி என்பவரின் இரட்டை குழந்தை பிரசவத்தின் போது வயிற்றிலேயே உயிரிழந்ததால் அவர்களது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தருமபுரி அடுத்த ஒட்டப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் அவருடைய மனைவி நந்தினி. இவர்களுக்கு வந்து கடந்த ஆண்டு திருமணம் முடிந்து நிலையில், நந்தினி கர்ப்பமடைந்துள்ளார். தருமபுரியில் உள்ள குமுதா என்ற தனியார் மருத்துவமனையில் மாதாந்திர பரிசோதனைகளை மேற்கொண்டு வந்த நிலையில், இன்று பிரசவத்திற்கான தேதியை மருத்துவர் முடிவு செய்துள்ளார்.
இதையும் படிங்க: கோடை காலத்தில் சூதானம் மக்களே... ஜூஸ் கடைகளில் அதிரடி ரெய்டு... குப்பைக்குப் போன 200 கிலோ பழங்கள்...!

இதற்காக நேற்று கர்ப்பிணி நந்தினி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு கர்ப்பிணி நந்தினிக்கு சில ஊசிகள் போடப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து நந்தினிக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் நந்தினி திடீரென கீழே விழுந்துள்ளார். தொடர்ந்து கர்ப்பிணியின் பல்ஸ் குறைவதை உறுதிப்படுத்திய மருத்துவர்கள், மருத்துவமனையில் போதிய வசதி இல்லை எனக்கூறி தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அங்கு நந்தினியை பரிசோதித்த மருத்துவர்கள் வயிற்றியிலேயே குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் தனியார் மருத்துவமனை அமைந்துள்ள சாலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தருமபுரி நகர போலீசார், தனியார் மருத்துவமனை மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
இதையும் படிங்க: ஜப்பானில் தொடங்கியது கொண்டாட்டம்: வசந்த காலத்தில் மனம் குளிர்விக்க பூத்தால் சாகுரா..!