காஷ்மீரின் பஹல்காமில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேரை குருவி சுடுவது போல் பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்ற சம்பவம் நாட்டையே உலுக்கிப்போட்டது. இதை முன் நின்று நடத்தியது பாகிஸ்தான் பயங்கரவாதிகள்; அவர்களை பின்னால் இருந்து இயக்கியது பாகிஸ்தான் ராணுவமும், அதன் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயும் தான் என்று தீர்க்கமாக நம்பப்படுகிறது. எனவே தான் பயங்கரவாதிகளுக்கு சோறு போட்டு வளர்க்கும் பாகிஸ்தானை பந்தாட அதிரடி நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது.

சிந்து நதி ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்களுக்கான விசா ரத்து, வர்த்தக உறவு துண்டிப்பு என்று ராஜதந்திர மற்றும் வர்த்தக ரீதியிலான தொடர்புகளை இந்தியா துண்டித்து வருகிறது. இதன் உச்சமாக ராணுவ நடவடிக்கை மேற்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் மிகத்தீவிரமாக நடந்து வருகின்றன. எந்த நேரமும் இந்தியா தங்களை தாக்கும் என்று உச்சக்கட்ட பீதியில் பாகிஸ்தான் உறைந்து போய் நிற்கிறது.
இதையும் படிங்க: இனி ஓடவும் முடியாது..! ஒளியவும் முடியாது..! சுத்துப்போட்ட ராணுவம்.. காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் கைது..!

இந்தியாவை மிரட்டும் வகையில் அரபிக்கடல் பகுதியில் ஏவுகணை சோதனை நடத்தப்போவதாக பாகிஸ்தான் சொன்னது. பாகிஸ்தான் கொட்டத்தை அடக்க அதே அரபிக்கடலில் ஸ்கெட்ச் போட்டது இந்தியா. ஐஎன்எஸ் சூரத் போர் கப்பலை அரபிக்கடலில் இறக்கியது. விமானம் தாங்கி போர் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தையும் அதே அரபிக்கடலில் இறக்கியது. விக்ராந்த் அரபிக்கடல் வந்ததும், பாகிஸ்தான் வெடவெடக்க ஆரம்பித்தது. ஐஎன்எஸ் கொல்கத்தா, ஐஎன்எஸ் நீலகிரி, ஐஎன்எஸ் கிரிவாக் (krivak) ஆகிய 3 போர் கப்பல்களும் அரபிக்கடல் வந்தன.

இதனிடையே நாடு முழுவதும் 54 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை போர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறவுள்ளது. இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. டைசியாக, இந்தியா - பாகிஸ்தான் இடையே 1971 ஆம் ஆண்டு போர் ஏற்பட்டபோது போர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்ற நிலையில், மீண்டும் நாளை பெறவுள்ளது. இவ்வாறு பதிலடி தாக்குதலுக்கு இந்தியா முழுவீச்சில் தயாராகி வரும் நிலையில், பாகிஸ்தானுடன் போர் மூண்டாலும் இந்தியாவுக்கு சேதம் இல்லை, பாதுகாப்பாக இருக்கும் என்று மூடிஸ் நிறுவனம் கணித்துள்ளது.

அமெரிக்காவில் நியூயார்க்கை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிறுவனம் மூடிஸ். இந்நிறுவனத்தின் ஆய்வாளர்கள், ஒரு நிறுவனத்தின் நிதி நிலைமை, பொருளாதார நிலைமைகள் குறித்து ஆழமாக ஆய்வு செய்து கணிப்புகளையும், மதிப்பீடுகளையும் வெளியிட்டு வருகின்றனர். இந்த நிறுவனம் இந்தியா, பாகிஸ்தான் போர் பதற்றச்சூழல் குறித்தும், போர் மூண்டாலும் இருநாடுகளின் பொருளாதார சூழல் எப்படி இருக்கும் என்றும் கணித்துள்ளது.

போர் பதற்றம் காரணமாக இந்தியாவின் பொருளாதார நடவடிக்கைகளில் எவ்வித பாதிப்பும் இருக்காது. இந்தியா மிக பாதுகாப்பாக இருக்கும். அதேநேரத்தில் பாதுகாப்புத்துறைக்கு அதிக செலவு செய்ய நேரிட்டால் இந்தியாவின் நிதி நிலையில் சற்றேதான் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால், போர் பாகிஸ்தானில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைவதில் பின்னடைவை எதிர்கொள்ளும். அந்திய செலாவணி கையிருப்பையும் பாதிக்கும் என மூடிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: இனி வாலாட்ட முடியாது! கடலுக்கு அடியில் கண்ணிவெடி? மாஸ் காட்டிய இந்திய கடற்படை..!