திருவள்ளூர் மாவட்டம் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் சென்னையின் மிக முக்கியமான குடிநீர் ஆதாரமாகும். இது கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது, மேலும் 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது. சென்னைக்கு நீர் வழங்குவதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது, அத்துடன் ஆந்திராவிலிருந்து வரும் கிருஷ்ணா நதி நீரைப் பெறுவதற்கான முக்கிய ஆதாரமாக உள்ளது.
பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறப்பு:
சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. மேலும் சென்னை புறநகர் பகுதிகள் மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் கனமழை காரணமாகவும் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் இன்று பிற்பகல் 2 மணி அளவில் முதல் கட்டமாக 700 கன அடி உபரி நீர் கொசஸ்தலை ஆற்றுக்கு திறக்கப்பட உள்ளது.
இதையும் படிங்க: என்ன ரத்த அழுத்தமா? கருப்பு பட்டை அணிந்த அதிமுகவினரை கிண்டல் செய்த சபாநாயகர்...!
அத்தகைய உபரி நீரானது தாமரைப்பாக்கம் அணைக்கட்டில் தேக்க வைத்து சோழவரம் ஏரிக்கு திருப்பி விடப்பட உள்ளது. இதனால் கரையோர பகுதியில் உள்ள அம்மனம்பாக்கம், அகரம், சோத்துப்பாக்கம் காரணி, பூச்சிஅத்திப்பட்டு, ஆயில்சேரி, எருமைவெட்டிப் பாளையம் ,அ லமாதி ஆகிய 8 கிராமங்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது,
அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கொசஸ்தலை ஆறு மற்றும் சோழவரம் ஏரிக்கு செல்லும் கால்வாய் பகுதியில் நீர்வரத்து அதிகரிக்க கூடும் என்பதால் கரையோரம் குடியிருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் மறு உத்தரவு வரும் வரை ஆற்றிலும் கால்வாய் பகுதிகளோ இறங்குவோ குளிக்கவோ செல்ஃபி எடுக்கவோ மீன்பிடிக்கவோ செல்லக்கூடாது என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் எச்சரிக்கை செய்துள்ளார்.
புழல் ஏரியா மக்களுக்கு எச்சரிக்கை:
புழல் ஏரி வேகமாக நிரம்பி வரும் நிலையில் பாதுகாப்பு கருதி ஏரியில் இருந்து பிற்பகல் 2மணியளவில் 200கனஅடி உபரிநீர் திறக்கப்பட உள்ளது. உபரிநீர் கால்வாய் ஓரங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் பிரதாப் அறிவுறுத்தியுள்ளார்.
3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீர் இருப்பு 3006 மில்லியன் கனஅடி நீர் நிரம்பியுள்ளது. 21.2 அடி ஆழம் கொண்ட புழல் ஏரியில் நீர்மட்டம் 19.97 அடியாக உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 325கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. குடிநீருக்காக ஏரியில் இருந்து 184 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது
புழல் ஏரியின் பாதுகாப்பு கருதி ஏரியில் இருந்து பிற்பகல் 2மணியளவில் முதற்கட்டமாக 200கனஅடி உபரிநீர் திறக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரதாப் அறிவித்துள்ளார். நாரவாரிகுப்பம், வடகரை, கிராண்டலைன், சாமியார்மடம், தண்டல்கழனி, பாபாநகர், வடபெரும்பாக்கம், வடகரை, மணலி, கொசப்பூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களின் வழியே உபரிநீர் செல்ல உள்ளதால் உபரிநீர் கால்வாய் ஓரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: அதிபரை இப்படியா அசிங்கப்படுத்துவீங்க! மோசமாக போட்டோ! கொதித்த ட்ரம்ப்!