சென்னை புழல் சிறையில் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த பெண் கைதி இருப்பதாக தெரிகிறது. அவர் போதைப் பொருள் வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மோனிகா என்ற அந்த சிறைவாசி தன்னை தாக்கியதாக பெண் காவலர் சரஸ்வதி குற்றம் சாட்டியுள்ளார். 20 ஆண்டுகளாக பணியாற்றி வரும் சரஸ்வதி மோனிகா என்ற கைதி தாக்கியதாக தெரிகிறது. இதனால் முகத்தில் பலத்த காயமடைந்த சரஸ்வதி ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக பேசிய காவலர் சரஸ்வதி, மோனிகா சிறையில் ராணி போல் வலம் வருவதாக குற்றச்சாட்டி உள்ளார். காவலர்களை மோனிகா தகாத வார்த்தையால் திட்டுவதாக குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். மோனிகா மீது சிறைத்துறை நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று காவலர் புகார் தெரிவித்தார்.

சிறையில் பெண் காவலர்களுக்கு பாதுகாப்பு இல்லை என காவலர் சரஸ்வதி குற்றம் சாட்டியுள்ளார். மோனிகாவிற்கு தேவையான அனைத்து வசதிகளும் எளிதில் கிடைப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மோனிகா என்ற கைதிக்கு சிறைத்துறை தலைவர் மகேஸ்வர் தயாள் உதவுவதாகவும், எந்த விவகாரமாக இருந்தாலும் சிறைத்துறை தலைவரிடம் மோனிகா நேரில் பேசுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். மோனிகா இருக்கும் அறைக்கு அருகில் மட்டும் கேமராக்கள் இல்லை என்றும் தனித்தனி கூடாரம் போன்று அமைத்து சகல வசதிகளுடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.
வெளிநாட்டு சிறை வாசிக்கு சிறைத்துறை தலைவர் பரிசுப் பொருள் கொடுத்து அனுப்புவதாகவும், சிறைத்துறை தலைவரின் போனிலிருந்து மோனிகா வெளியில் பேசுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். வெளிநாட்டு கைதிகளுக்கு மட்டும் சிறையில் பியூட்டி பார்லர் செயல்படுவதாகவும், வெளியில் இருக்கும் அனைத்து பொருட்களும் அவர்களுக்கு கிடைப்பதாகவும், சிறைத்துறை தலைவர் மகேஸ்வர் தயவில் வெளிநாட்டு கைதிகள் ஆட்டம் போடுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. ஏற்கனவே பலமுறை காவலர்களை கைதி மோனிகா தாக்கியதாகவும் மோனிகா மீது சிறைத்துறை நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் புகார் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நிர்வாண வீடியோவை வெளியிடுவேன்! போலீஸ் ஸ்டேஷனிலேயே மிரட்டல்... களி திண்ண வைத்த போலீஸ்!
இதையும் படிங்க: ஐயா நான் செஞ்சது தப்புதான்... நீதிமன்றத்தில் ஜாமீன் கோரிய ஸ்ரீகாந்த்!