தமிழ்நாடு அரசு, மக்களின் நலனை முன்னிறுத்தி பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இந்த வரிசையில், மக்களின் உடல்நலனை பாதுகாக்கவும், இலவச மருத்துவ சேவைகளை அனைவருக்கும் எளிதாக கிடைக்கச் செய்யவும் வடிவமைக்கப்பட்ட ஒரு முக்கிய திட்டமாக “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டம் உருவாகியுள்ளது.
இத்திட்டம், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசின் மக்கள் நலன் சார்ந்த பணிகளில் மற்றொரு மைல்கல்லாக அமைகிறது.
நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டம், மக்களுக்கு பல வழிகளில் பயனளிக்கிறது. முதன்மையாக, இலவச மருத்துவ பரிசோதனைகள் மூலம் நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடிகிறது.
இதையும் படிங்க: நிரந்தர பணியாக மாற்றங்கள்! ஊர்க்காவல் படையினருக்காக குரல் கொடுத்த சீமான்...
இது, சிகிச்சை செலவுகளைக் குறைப்பதோடு, உயிரிழப்புகளையும் தடுக்கிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படுவதால், அவர்கள் அரசின் பிற நலத்திட்டங்களைப் பெறுவது எளிதாகிறது. முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தில் புதிய பயனாளர்கள் இணைவதற்கு வழிவகை செய்யப்படுவதால், மருத்துவ செலவுகளுக்கு நிதி உதவி கிடைக்கிறது.
மேலும், கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்கள் அனைவருக்கும் மருத்துவ சேவைகள் அருகாமையில் கிடைப்பது, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகிறது.

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் நாளை முழு வீச்சில் செயல்பாட்டுக்கு வர உள்ள நிலையில், திட்டம் குறித்து ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். ஒரு வட்டாரத்திற்கு மூன்று மருத்துவ முகாம்கள் வீதம் நடத்தப்படும் என்றும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்றும் கூறினார்.
தமிழகம் முழுவதும் மொத்தம் 1256 முகாம்கள் நடத்தப்படும் எனவும் வாரம்தோறும் சனிக்கிழமைகளில் முகங்கள் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்க உள்ளார் என கூறிய அவர், சென்னையில் 15 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்றும் மருத்துவ முகாம்களில் சோதனை முடிவுகள் அன்று மாலையை அளிக்கப்படும் எனவும் கூறினார்.
இதையும் படிங்க: காதலை கொன்னு புதச்சிடாதீங்க! ஆணவ படுகொலையை சுட்டிக்காட்டி சீமான் ஆதங்கம்..!