தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை நடிகர் விஜய் 2024 பிப்ரவரி மாதம் தொடங்கியதிலிருந்து, அது தமிழ்நாட்டு அரசியல் களத்தில் ஒரு புதிய சக்தியாக உருவெடுத்து வருகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு செயல்படும் இக்கட்சி, ரசிகர் மன்றங்களை அடிப்படையாகக் கொண்டு வலுவான அமைப்பை உருவாக்கி வருகிறது. ஆனால், கட்சி தொடங்கி ஓராண்டுக்குப் பிறகு, அதாவது 2025 தொடக்கத்தில், களத்தில் இல்லை என்ற விமர்சனம் கடுமையாக எழுந்தது. இது கட்சியின் அடிமட்ட செயல்பாடுகள், மக்கள் பிரச்சினைகளில் நேரடி தலையீடு இன்மை ஆகியவற்றை மையப்படுத்தியது.
இந்த விமர்சனத்தின் பின்னணி என்னவென்றால், கட்சி தொடங்கிய பிறகு விஜய் பெரிய அளவில் மாநாடுகளையும் கொள்கை அறிவிப்புகளையும் மேற்கொண்டாலும், அடிமட்டத்தில் – அதாவது கிராமங்கள், உள்ளூர் பிரச்சினைகள், போராட்டங்கள் போன்றவற்றில் – கட்சியின் தொண்டர்கள் அல்லது தலைவர்கள் தீவிரமாக இறங்கி வேலை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு. மூத்த அரசியல் விமர்சகர்கள் சிலர், கட்சிக்கு உறுப்பினர்கள் அதிகம் இருந்தாலும், அது வெறும் ரசிகர் கூட்டமாகவே இருக்கிறது, அரசியல் இயக்கமாக மாறவில்லை என்று கூறினர்.

சமீபத்தில் ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு நடத்திய நிலையில் களத்தில் இல்லாதவர்களோடு போட்டி போட முடியாது என்று தெரிவித்திருந்தார். யார் களத்தில் இல்லை என்பது மக்களுக்கு தெரியும் என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த நிலையில்,
இதையும் படிங்க: தமிழகத்தை ஆளப்போவது ஒரே தளபதி தான்… ஈரோட்டில் விஜய் சந்திப்பில் செங்கோட்டையன் திட்டவட்டம்…!
தவெக மீதான விமர்சனங்களுக்கு செங்கோட்டையன் பதிலடி கொடுத்துள்ளார். தவழும் குழந்தைகள்தான் பெரியவராவார்கள் என்றும் பெரியவரான பின்தான் தன்னாட்சி நடத்துவார்கள் எனவும் செங்கோட்டையன் கூறினார். நாங்கள் களத்தில் இருக்கிறோமா இல்லையா என்பது தேர்தல் முடிவு தீர்ப்பளிக்கும் என்றும் தெரிவித்தார். பொங்கல் முடிந்ததற்கு பிறகு எங்களுடைய திருப்புமுனையை பார்த்து நாடே வியக்கும் என்றும் அவர் உறுதிப்பட கூறினார்.
இதையும் படிங்க: களைக்கட்டுது ஈரோடு… விஜய் பார்க்க QR CODE, பாஸ் தேவையே இல்லை… செங்கோட்டையன் அறிவிப்பு…!