தமிழகத்தில் நாளை மறுநாள் மோன்தா புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் வலுவடையும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வட மாவட்டங்கள் உள்ளிட்ட இடங்களில் கன மழை முதல் அதிக கன மழை வரை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வட கடலோர மாவட்டங்கள், வட தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது.
காற்றழுத்த தாழ்வு பகுதி சூறாவளி புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக இந்திய மாநில ஆய்வு மையம் எச்சரித்தது. இதனிடையே வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெற்றுள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை குமரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை தமிழகத்தில் ஆறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மோன்தா புயல் எப்ப வரும்? எங்கெல்லாம் மழை... வானிலை மையத்தின் முக்கிய அப்டேட்...!
இது மட்டுமல்லாமல் நாளை மறுநாள் சென்னைக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் நாளை மறுநாள் மிக கனமழை பெய்யும் என்றும் ஆரஞ்சு அலர்ட் கொடுத்தும் வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: சம்பவம் இருக்கு… "மோன்தா" சூறாவளி புயல் வருதாம்… இந்திய வானிலை மையம் அதி முக்கிய அறிவிப்பு…!