தனது பேரன் முகுந்தனுக்கு கட்சி பதவி கொடுத்ததில் இருந்து அன்புமணிக்கும் ராமதாசுக்கும் இடையே பிரச்சனை ஆரம்பித்தது. பிறகு முகுந்தன் தனது கட்சி பதவியை ராஜினாமா செய்தார். இருப்பினும் இருவருக்குமான பிரச்சனை ஓயவில்லை. தனித்தனியாக பொதுக்குழு கூட்டங்கள், செயற்குழு கூட்டங்களை நடத்தி வந்தனர். ராமதாஸ் குறித்து அன்புமணியும் அன்புமணி குறித்து ராமதாஸும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தனர்.
பாமக தலைவர் நான்தான் என ராமதாஸ் ஒரு பக்கம் கூறிவரும் நிலையில் பாமகவின் தலைவர் நான்தான் என அன்புமணி திட்டவட்டமாக தெரிவித்து வருகிறார். தேர்தல் ஆணையம் அங்கீகரித்து விட்டதாகவும் கூறி வருகிறார். ஏமாற்று வேலை தயவுசெய்து அன்புமணி தரப்பு தேர்தல் ஆணையத்தை ஏமாற்றியதாக ராமதாஸ் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
இவையெல்லாம் ஒரு பக்கம் இருக்க முகுந்தனின் தாயாரும், ராமதாஸின் மகளும் ஸ்ரீகாந்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த ராமதாஸ் தரப்பு பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார். அன்புமணிக்கு மாற்றாக ஸ்ரீகாந்தி களம் இறக்கப்படுகிறார் என்று பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் பாமக செயல் தலைவராக செயல்படுவார் என ராமதாஸ் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: டிக்.. டிக்... அன்புமணி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்... பாண்டி பஜார் போலீஸ் தீவிர விசாரணை...!
கட்சிக்கும் தனக்கும் ஸ்ரீகாந்தி பாதுகாப்பாக இருப்பார் என தெரிவித்தார். பாமக செயல் தலைவர் பதவியில் இருந்து மகன் அன்புமணியை நீக்கிய ராமதாஸ் அந்த பதவியை மகள் ஸ்ரீகாந்திக்கு வழங்கினார். ராமதாஸ்- அன்புமணி இடையே மோதல் நிலவி வரும் நிலையில் ஸ்ரீகாந்தி செயல் தலைவராக செயல்படுவார் என ராமதாஸ் அறிவித்துள்ளது பேசப் பொருளாக மாறி இருக்கிறது.
இதையும் படிங்க: ஐயாவைப் பார்த்துக்க துப்பில்ல… சும்மா பேசிக்கிட்டு... அன்புமணிக்கு ராமதாஸ் பதிலடி