பாமக விதிகளில் திருத்தம் செய்து ராமதாஸ் தரப்பில் நடந்த சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ராமதாஸ் உருவாக்கப்பட்ட பாமக ஒழுங்கு நடவடிக்கை குழுவின் அறிக்கை தொடர்பாக கூறப்பட்டது. அன்புமணியின் செயல்பாடு கட்சி கட்டுப்பாட்டை மீறியதாகவே கருதப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. ராமதாசுடன் இருப்பவர்கள் மற்றும் ராமதாஸ் பற்றியும் மிகவும் அவதூறாக அநாகரீதமான மனதை புண்படுத்தும் செய்திகளை ஒவ்வொரு நாளும் பொதுமக்கள் மத்தியில் அவமானப்படுத்தும் செயலில் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டது.
ராமதாஸ் தான் கட்சியின் தலைவர் என்றும் நிறுவனர் மற்றும் செயல் தலைவராக ராமதாஸ் செயல்படுவார் எனவும் தீர்மானிக்கப்பட்டது. சமரச பேச்சுவார்த்தையை அன்புமணி ஏற்காமல் உதாசீனப்படுத்தி இருப்பதாகவும் கூறப்பட்டது. ராமதாஸின் அனுமதி பெறாமல் அன்புமணி நடைப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார் என்று கூறப்பட்டது. பாமக, நிறுவனர் குறித்து நாள்தோறும் சமூக வலைதளங்களில் அவதூறுகள் பரப்பப்படுவதால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

கட்சியை பிளவுபடுத்த அன்புமணி செயற்பட்டதாகவே கருதப்படுவதாகவும் அன்புமணி ராமதாஸை தொடர்ந்து அவமானப்படுத்தி வருகிறார் எனவும் கூறப்பட்டது. தனி நாற்காலி போட்டு துண்டு அணிவித்து ராமதாசை அன்புமணி அவமதித்து விட்டதாகவும் பாமக தலைமை அலுவலகத்தை திட்டமிட்டு அன்புமணி வேறு இடத்திற்கு மாற்றி உள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுபோல அன்புமணி மீது பதினாறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இந்த நிலையில் அன்புமணி மீதான 16 குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாமகவின் தேர்தல் நடவடிக்கை குழு சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.
இதையும் படிங்க: நோட்டீஸ் கொடுத்தும் கண்டுக்கல! அடுத்த கட்ட நடவடிக்கை? பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தில் காரசார விவாதம்..!
இதற்கு பதில் அளிக்க அன்புமணி தவறும் பட்சத்தில் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில், அன்புமணிக்கு ராமதாஸ் தரப்பு அளித்த கெடு நேற்றுடன் நிறைவு பெற்றது. இதுவரை அன்புமணி தரப்பில் பதிலளிக்காத நிலையில், அன்புமணியை சஸ்பெண்ட் செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தைலாபுரத்தில் பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம் நடைபெற்றது. அன்புமணி குற்றச்சாட்டுகளின் மீது பதில் அளிக்காத நிலையில், அவர் மீது எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அன்புமணி மீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தொடர்பான அறிக்கையை ஒழுங்கு நடவடிக்கை குழு ராமதாஸிடம் சமர்ப்பித்துள்ளது. அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக ராமதாஸ் விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அன்புமணி சஸ்பெண்ட்? ராமதாஸ் தரப்பு கொடுத்த கெடு முடிஞ்சது…