அன்புமணி மீதான 16 குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாமகவின் தேர்தல் நடவடிக்கை குழு சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. முதல் முறை விளக்கம் அளிக்காத நிலையில் இரண்டாவது முறையும் அவகாசம் கொடுக்கப்பட்டது. அப்போதும் அன்புமணி விளக்கம் கொடுக்கவில்லை. இதன் காரணமாக அவர் பாமகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளில் இருந்து நீக்கப்படுவதாக ராமதாஸ் அறிவித்தார். பாமகவில் இருந்து நீக்கப்பட்ட அன்புமணி தனிக்கட்சி ஆரம்பித்து கொள்ளலாம் என்றும் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அன்புமணியுடன் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்றும் தெரிவித்தார்.
கட்சி விதிகள் படியும் ஜனநாயக முறைப்படியும் விளக்கம் தர அனைத்து வாய்ப்புகளும் தரப்பட்ட பின்னரே அன்புமணி நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ராமதாஸின் அறிவிப்பு அன்புமணியை பாதிக்காது என்றும் அன்புமணி தான் பாமகவின் தலைவர் என்றும் திட்டவட்டமாக அன்புமணி தரப்பு வழக்கறிஞர் பாலு தெரிவித்திருந்தார். அன்புமணியின் பதவி காலத்தை நீடித்து தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் ராமதாஸ் மற்றும் அன்புமணி தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் ராமதாஸ் தரப்பு மற்றும் அன்புமணி தரப்பு ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. வன்னியர்கள் இட ஒதுக்கீட்டுக்காக உயிரிழந்த 21 பேருக்கு ஒரு பதினைந்தாம் தேதி அன்புமணி அஞ்சலி செலுத்த உள்ளது நிலையில் வணிகர் சங்க அலுவலகத்திற்கு பூட்டு போடப்பட்டது.
இதையும் படிங்க: #BREAKING: அன்புமணி தனிக்கட்சி தொடங்கட்டும்... பாமக என் உழைப்பு! ராமதாஸ் திட்டவட்டம்
திண்டிவனத்தில் உள்ள வன்னியர் சங்க அலுவலகத்திற்கு அன்புமணி செல்வதாக வெளியான தகவலை அடுத்து ராமதாஸ் தரப்பினர் அலுவலகத்திற்கு பூட்டு போட்டு உள்ளனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இரு தரப்பினரும் மாறி மாறி போலீசார் முன்னிலையிலேயே மோதிக்கொண்டனர். இதனால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
இதையும் படிங்க: அன்புமணி கூட தொடர்பு வச்சுக்கிட்டா அவ்ளோதான்! கட்சி நிர்வாகிகளுக்கு ராமதாஸ் எச்சரிக்கை...