கரும்பு கொள்முதல் விலைக்கு 139 ரூபாய் மட்டும் உயர்த்துவது போதாது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் சாகுபடி செய்யப்படும் 9.5% மற்றும் அதற்கும் குறைவான சர்க்கரைத் திறன் கொண்ட கரும்புகளுக்கு டன்னுக்கு .3,290 கொள்முதல் விலையாக வழங்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது எந்த வகையிலும் போதுமானதல்ல என கூறியுள்ளார்.

கரும்புக்கான சாகுபடி செலவுகள் பெருமளவில் உயர்ந்துள்ள நிலையில், 4.41% மட்டும் விலையை உயர்த்துவது நியாயமற்றது என்றும் இது உற்பத்திச் செலவை ஈடு செய்வதற்கு கூட போதாது எனவும் கூறினார். தமிழ்நாட்டில் ஒரு டன் கரும்புக்கு ரூ.5500 வழங்கப்பட வேண்டும் என்பது தான் உழவர் அமைப்புகளின் கோரிக்கை. எனவே, கரும்பு கொள்முதல் விலை தொடர்பாக மத்திய அரசுடன் தமிழக அரசு உடனடியாக பேச்சு நடத்தி ஒரு டன் கரும்புக்கான கொள்முதல் விலையாக ரூ. 4,000 நிர்ணயிக்க வகை செய்ய வேண்டும்.
இதையும் படிங்க: மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தட்டும்.. தமிழக அரசு ஒரு சர்வே எடுக்கணும்.. ராமதாஸ் புது டிமாண்ட்!

அத்துடன் தமிழக அரசின் சார்பில் டன்னுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கி உழவர்களுக்கு ஒரு டன் கரும்புக்கு ரூ.5000 கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: பாமகவை சல்லி, சல்லியாய் நொறுக்கும் ரெண்டு மணிகள்... சோசியல் மீடியாவில் வெடித்தது உரிமைப்போர்!