ராமதாஸின் மகள்வழிப் பேரன் மற்றும் அன்புமணி ராமதாஸின் அக்காவான காந்திமதி - பரசுராமன் தம்பதியினரின் மகன் தான் முகுந்தன். பாமகவில் மாநில ஊடகப் பிரிவு செயலாளராகப் பணியாற்றி வந்த முகுந்தன், அண்மையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் பாமக இளைஞரணி தலைவராக நியமிக்கப்பட்டார். இது அன்புமணிக்கும் ராமதாசுக்கும் இடையே பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியது. கட்சியே இரண்டாக உடையும் சூழலுக்கு சென்ற நிலையில், ராமதாஸ் - அன்புமணி மோதலை தொடர்ந்து பாமக இளைஞரணி தலைவர் பதவியை முகுந்தன் ராஜினாமா செய்தார். அன்று முதல் அன்புமணிக்கும் ராமதாசுக்கும் இடையே மோதல் முற்றிய நிலையில் இருவரும் இரு துருவங்களாக மாறிவிட்டனர். கட்சியை தூண்டாடி தனித்தனியாக ஆலோசனைக் கூட்டங்களையும் பொதுக்குழு கூட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

ராமதாஸ் ஆதரவாளர்களை அன்புமணி கட்சியிலிருந்து நீக்குவதும், அன்புமணி ஆதரவாளர்களை பொறுப்பில் இருந்து ராமதாஸ் நீக்குவதுமாக பிரச்சனை முற்றி வருகிறது. சமீபத்தில் செயற்குழுவில் இருந்து அன்புமணியை ராமதாஸ் நீக்கி இருந்தார். அதுமட்டுமில்லாத 21 பேர் அடங்கிய புதிய நிர்வாகிகள் பட்டியலையும் வெளியிட்டார். இதற்கு முன்னதாக பாமக எம்எல்ஏ அருளை கட்சிப் பதவியில் இருந்து மட்டுமல்லாமல் கட்சியிலிருந்தே அன்புமணி நீக்கிவிட்டார். ராமதாஸ் தரப்பு நிர்வாகிகளின் செயற்குழுக் கூட்டத்தில் ராமதாஸின் மகளும் அன்புமணியின் சகோதரியமான ஸ்ரீகாந்தி பங்கேற்றார். ஸ்ரீகாந்தியின் மகன் முகுந்தனுக்கு பதவி வழங்கப்பட்டதால் தொடங்கிய மோதல் வெடித்த நிலையில், ஸ்ரீகாந்தி செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்று இருப்பது அன்புமணிக்கு போட்டியாக களமிறக்கப்பட்டதாக சொல்லப்பட்டது.
ராமதாசுக்கும் அன்புமணிக்கும் இடையே பிரச்சனை தீர வழியே இல்லை என சொல்லப்பட்ட நிலையில் அன்புமணியை விரைவில் சந்திக்க உள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டி அளித்துள்ளார். தான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் என்றும் மோதல் போக்கு நான்கு நாட்கள் இருக்கும்., அதன் பின்னர் சரியாகிவிடும் என்றும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இருவருக்கும் இடையே பிரச்சனை தீர வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இருப்பினும் ராமதாஸ் ஏற்கனவே நல்ல தீர்வு கிடைக்கும் என்று கூறியும் பிரச்சினை ஓயாமல் இருந்து ஒரு நிலையும் என்னதான் நடக்கிறது என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்கலாம் என்ற கண்ணோட்டத்திற்கு பலர் சென்று விட்டனர்.
இதையும் படிங்க: எங்களுக்கு என்ன பயம்? ஒட்டுக் கேட்பு கருவி உண்மைனா வெச்சது யாருன்னு கண்டுபிடிங்க... அன்புமணி தரப்பு வலியுறுத்தல்!
இதையும் படிங்க: தேவைப்பட்டால் இனிஷியல் போட்டுக்கொள்... தன் பெயரை அன்புமணி பயன்படுத்தக் கூடாது! ராமதாஸ் தடாலடி..!