அன்புமணிக்கும் ராமதாஸுக்கும் இடையே கடும் பிரச்சனை நிலவி வருகிறது. பாட்டாளி மக்கள் கட்சி இரண்டாக பிரிந்துள்ளது. அன்புமணி தரப்பு ஒரு பக்கமாகவும் ராமதாஸ் தரக்கு ஒரு பக்கமாகவும் பிரிந்து செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களை நடத்தி வருகின்றனர். அது மட்டுமல்லாது புதிதாக நிர்வாகிகளை நியமித்தும் பலரை கட்சியிலிருந்தும் பதவியிலிருந்தும் நீக்கி வருகின்றனர். தனது பெயரைக் கூட அன்புமணி பயன்படுத்தக்கூடாது வேண்டுமென்றால் இனிஷியலுக்கு பயன்படுத்திக் கொள்ளட்டும் என்று கூட ராமதாஸ் கடுமையாக பேசிவிட்டார். இருவருக்கும் சமூக தீவு ஏற்பட வாய்ப்பே இல்லை என்பதை இது காட்டுவதாக தெரிகிறது. இருப்பினும் இவை அனைத்தும் அரசியல் உத்தியாகவும் ஒரு புறம் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தனது வீட்டில் ஒட்டுக்கேட்கும் கருவி பொருத்தப்பட்டிருந்ததாக விருத்தாசலத்தில் செய்தியாளர்களிடம் பரபரப்பான குற்றச்சாட்டு ஒன்றை பாமக நிறுவனர் ராமதாஸ் முன்வைத்தார். அவர் கூறுகையில், தனது வீட்டில், குறிப்பாக தான் உட்காரும் இடத்திற்கு அருகே இந்தக் கருவி இருந்ததை இரண்டு நாட்களுக்கு முன்பு கண்டறிந்ததாகவும், இது லண்டனில் இருந்து வாங்கப்பட்ட விலை உயர்ந்த கருவி என்றும் தெரிவித்தார். இந்தக் கருவியை யார், எதற்காக பொருத்தினார்கள் என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தக் குற்றச்சாட்டு, பாமகவில் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே நடந்து வரும் உட்கட்சி மோதலின் பின்னணியில் வெளியாகியுள்ளது. இருவருக்கும் இடையேயான பனிப்போர் கட்சி தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், ராமதாஸ் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ராமதாஸ் இல்லத்தில் ஒட்டு கேட்ப கருவியை வைத்தது யார் என்பது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என அன்புமணி தரப்பு வலியுறுத்தி உள்ளது. ஒட்டுக்கேட்பு கருவி பொருத்தப்பட்டது உண்மை என்றால் அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை கண்டறிய வேண்டும் என அன்புமணி தரப்பைச் சேர்ந்த பாமக செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் பாலு கோரிக்கை விடுத்துள்ளார். சைபர் பாதுகாப்பு வல்லுனர்களை உள்ளடக்கிய உயர்நிலைக் குழுவை அமைத்து விசாரணை நடத்த வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பின்னணியில் உள்ளவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தேவைப்பட்டால் இனிஷியல் போட்டுக்கொள்... தன் பெயரை அன்புமணி பயன்படுத்தக் கூடாது! ராமதாஸ் தடாலடி..!
இதையும் படிங்க: என் பொண்ணு ஶ்ரீகாந்திக்கு இப்போதைக்கு பதவி இல்ல.. ஆனா அப்புறம்? ட்விஸ்ட் வைத்த ராமதாஸ்..!