தமிழ்நாட்டில் 2 கோடியே 22 லட்சத்து 59,224 குடும்ப அட்டைகள் உள்ளன. 18 லட்சத்து 9 ஆயிரத்து 677 புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. புதிய ரேஷன் கார்டுகளுக்கான விண்ணப்பங்களில் 51,327 ஏற்கப்பட்டுள்ளன. 37,299 முழுநேர, பகுதி நேர ரேஷன் கடைகள் உள்ளன. ரேஷன் கடைகளில் புகார் பதிவேடு வைக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் மக்களுக்கு சரியான அளவில் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இப்போது தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் ஒரு அதிரடி மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. ரேஷன் கடைக்குப் போறீங்களா? இனி கையில் பணம் கொண்டு போக வேண்டிய அவசியம் இருக்காது. உங்க ஸ்மார்ட் போன் ஒன்னு போதும். தமிழ்நாடு அரசு ஒரு அதிரடியான திட்டத்தை அறிவிச்சிருக்கு. அடுத்த ஒரு வருஷத்துக்குள்ள தமிழ்நாட்டில் இருக்கற 37,328 ரேஷன் கடைகளிலும் யூபிஐ மூலமா பணம் செலுத்துற வசதி வரப்போகுது. இப்போ வெறும் 10,000 கடைகளில் மட்டும் இருக்கிற இந்த டிஜிட்டல் பரிவர்த்தனை இனி அனைத்து ரேஷன் கடைகளுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் ரொம்ப எளிதாகவும், பாதுகாப்பாகவும் பணம் செலுத்த முடியும்.
மேலும் ஊழியர்கள் கையாடல் போன்ற சம்பவங்களில் ஈடுபடுவதை தடுப்பதோடு, வெளிப்படைத் தன்மையையும் செயல்படுத்த முடியும் என தமிழ்நாடு அரசு தீர்மானித்துள்ளது. இதற்காக ஒவ்வொரு கடைக்கும் சுமார் 2,000 ரூபாய் செலவில் பிஓஸ் கருவி, ஸ்கேனர், தானியங்கி பில்லிங் இயந்திரம்னு கொடுத்து ரேஷன் கடைகளை நவீனமயமாக்க அரசு திட்டமிட்டிருக்கு.
இதையும் படிங்க: “இனி UPI கிடையாது.. ஒன்லி கேஷ்''... அதிரடி அறிவிப்பின் பின்னணி என்ன..?
ஏற்கனவே 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் ISO 91 தர சான்றிதழும், 2000 கடைகள் சேமிப்பு பாதுகாப்புக்கான ISO 28 சான்றுதழும் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில தற்போது யூபிஐ வசதியும் சேரப்போகுது. இது மட்டுமில்ல இளைஞர்களுக்கு ஒரு நல்ல செய்தி. நியாய விலை கடைகளில் காலியாக உள்ள 3,353 காலி பணியிடங்களை நிரப்பவும் அரசு முடிவு செய்துள்ளது. மொத்தத்துல டிஜிட்டல் பரிவர்த்தனை, நலத்திட்டங்கள், வேலை வாய்ப்புன்னு தமிழ்நாடு ஒரு புதிய பாதையில பயணிக்குதுன்னே சொல்லலாம்.
இதையும் படிங்க: எல்லா தப்பையும் செஞ்சது நேரு தான்! காங்கிரசுக்கு அருகதையே இல்ல...அமித்ஷா கொந்தளிப்பு