அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்ற கருத்தை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறி வந்தார். தலைமைக்கு அவர் கெடு விதித்த நிலையில் அவரது கட்சி பொறுப்புகள் பறிக்கப்பட்டன. இதற்கிடையில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன்னில் மரியாதை செலுத்துவதற்காக ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோருடன் சென்ற நிலையில், சசிகலாவையும் செங்கோட்டையன் சந்தித்து பேசினார். இதனால் ஆத்திரமடைந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செங்கோட்டையனை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கி உள்ளார். செங்கோட்டையின் விவகாரம் தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், நம்பினார் கெடுவதில்லை , இது நான்கு முறை தீர்ப்பு என்ற இலக்கணத்தின் படி, இன்றைக்கு நம்பாமல் கெட்டவர் வரிசையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உள்ளார். அமைதி ,அடக்கம், அதிகம் பேசாதவர், சிறந்த உழைப்பாளி, நடுநிலை தவறாதவர், கட்சி தொண்டர் என்ற பொய்யான பிம்பத்தின் கட்டமைப்பு இன்றைக்கு உடைந்து போய்விட்டது என்று தெரிவித்தார்.

அவர் பேட்டியில் பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும் தான் சுயநலவாதி என்பதை அவர் எப்படி இருந்துள்ளார் என்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது என்றும் மொத்தத்தில் அவரது பேச்சு பூனைக்குட்டி வெளியே வந்தது போல் இருக்கிறது. எடப்பாடியாரை குறைத்து மதிப்பீட்டவர்கள் தோற்றுப்போன வரலாறு தான் உள்ளது எனவும் கூறினார். ஆகவே எடப்பாடியார் மீது விமர்சனம் செய்து பழி சுமத்தி எப்படி வன்மத்தை கொண்டு உள்ளார் என்பதை அவர் பேச்சிலிருந்து நமக்கு தெரிகிறது.
இதையும் படிங்க: அப்படியா சார்? யார் காலாவதி ஆவாங்கன்னு இன்னும் ஒரே மாசத்துல தெரியும்..! மாஜி அமைச்சருக்கு டிடிவி பதிலடி...!
அம்மா இருக்கின்ற வரை அமைச்சராக முடியாமல் , அம்மாவின் நம்பிக்கை ஏன் நீங்கள் பெற முடியவில்லை. அம்மாவிற்கு நீங்கள் என்ன துரோகம் செய்தீர்கள் என்று கேட்டார். அந்த துரோகத்தை நீங்கள் ஒப்புக்கொள்ள போவதில்லை. ஆனால் ஆண்டவனுக்கும், அம்மாவுக்கு தான் நீங்கள் செய்த துரோகம் தெரியும். அந்த துரோகத்தை நீங்கள் மறந்து விட்டு பேசுவது யாருக்கும் புரியவில்லை என்றும் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தவெகவை ஆண்டவன் நினைத்தாலும் காப்பாற்ற முடியாது… எங்க கூட்டணிக்கு வாங்க… ஆர்.பி. உதயகுமார் அழைப்பு…!