அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைப்பதற்காக தொடர்ந்து அந்த கட்சிக்கு ஆதரவு அளித்து பேசி வருவதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. இந்த நிலையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நேரடியாகவே விஜய் தங்களுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் திமுக விஜய்யை அழித்துவிடும் எனவும் கூறியிருந்தார்.
அதிமுகவுடன் விஜய் கூட்டணி வைத்தால் அது தற்கொலைக்கு சமம் என்று டிடிவி தினகரன் கடுமையாக கருத்து தெரிவித்திருந்தார். இதற்கிடையில், டிடிவி தினகரன் காலாவதியானவர் என்றும் அவரைப் பற்றி பேச தேவையில்லை எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேசி இருந்தார். காலாவதி ஆவதற்கு முன் சாப்பிட்டால் மாத்திரை என்றும் அதன் பின் சாப்பிட்டால் விஷம் எனவும் கூறிய அவர், டிடிவி தினகரனை சரமாரியாக சாடினார்.

இந்த நிலையில் தன்னை விமர்சித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பதிலடி கொடுத்தார். அறந்தாங்கியில் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அரசியலில் யார் காலாவதி ஆவார்கள் என்பது இன்னும் ஒரே மாதத்தில் தெரியவரும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: நம்பியவர்களை அனாதையாக்கியவர் TTV தினகரன்... ஆர்.பி உதயகுமார் பதிலடி...!
கொடநாடு கொலை வழக்கு குற்றவாளிகள் நெருங்கி விட்டோம் என்றார்கள் என்றும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை எனவும் தெரிவித்தார். தொண்டர்களை ஏமாற்றுவதற்காக தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி என எடப்பாடி பழனிச்சாமி கூறி வருவதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் விஜயை அழித்து விடுவார்கள் என்றும் அதனால் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் எனக்கூறி ஏமாற்றி வருவதாக சாடினார்.
இதையும் படிங்க: தவெகவை ஆண்டவன் நினைத்தாலும் காப்பாற்ற முடியாது… எங்க கூட்டணிக்கு வாங்க… ஆர்.பி. உதயகுமார் அழைப்பு…!