தமிழக வெற்றி கழகத்தை கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் எடப்பாடி பழனிச்சாமி அந்தக் கட்சிக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறார் என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக தமிழக வெற்றி கழகம் அதிமுகவோடு கூட்டணி வைக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. சமீபத்தில் எடப்பாடி பழனிச்சாமி மேற்கொண்ட சுற்றுப்பயணத்தை தமிழக வெற்றி கழகத்தின் கொடி பறந்தது பேசு பொருளாக மாறியது.
இந்த நிலையில், அதிமுக தமிழக வெற்றி கழக கூட்டணி சேர வேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர். பி உதயகுமார் தெரிவித்துள்ளார். தகுந்த நேரத்தில் சரியான முடிவை எடுப்பவர்தான் நல்ல தலைவர் என்று கூறினார். சிரஞ்சீவி அரசியல் கட்சி தொடங்கி சரியான முடிவு எடுக்காதுதால் தோல்வி அடைந்தார் என்று குறிப்பிட்டு பேசினார். ஆனால், பவன் கல்யாண் சரியான முடிவை சரியான நேரத்தில் எடுத்ததால் துணை முதல்வராக உள்ளார் என்று ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். கூட்டணி விவகாரத்தில் திமுக தலைமை மிக சரியாக பயனிப்பதாக கருத்து தெரிவித்துள்ளார். ஆனால், சரியான முடிவு எடுக்காததால் வைகோவின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது என்றும் குறிப்பிட்டு பேசினார்.

திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழக வெற்றி கழகத்தை ஆண்டவன் நினைத்தாலும் காப்பாற்ற முடியாது என்று அவர் எச்சரித்துள்ளார். ராட்சத பலம் வாய்ந்த திமுகவை வீழ்த்த அதிமுக கூட்டணியில் தமிழக வெற்றி கழகம் சேர வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: நம்பியவர்களை அனாதையாக்கியவர் TTV தினகரன்... ஆர்.பி உதயகுமார் பதிலடி...!
தமிழக அரசியலில் மிகவும் முக்கியத்துவம் பெற்ற கட்சியான அதிமுக மீண்டும் மீண்டும் தமிழக கட்சி கழகத்தை கூட்டணிக்கு அழைப்பதன் பின்னணி என்ன என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. தமிழக வெற்றி கழகம் இல்லாமல் திமுகவை வீழ்த்த முடியாது என எண்ணுகிறதா அதிமுக என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. பிரச்சார கூட்டத்தில் தமிழக வெற்றிக்கழக கொடி பறந்த போதே கூட்டணிக்கு பிள்ளையார் சுழி என எடப்பாடி பழனிச்சாமி பேசியிருந்தார். தமிழக வெற்றி கழகத்தை நம்பி தேர்தலில் களம் காணும் அளவிற்கு பலம் இழந்து விட்டதா அதிமுக என விமர்சிக்கப்பட்டு வருகிறது. கூட்டணிக்கு அழைப்பு என்ற பெயரில் தமிழக வெற்றி கழகத்திற்கு அதீத முக்கியத்துவம் அளிக்கிறதா அதிமுக என்ற கேள்விகளும் முன்வைக்கப்படுகிறது.
இதையும் படிங்க: கல்குவாரிக்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.. மக்களுக்காக நின்ற ஆர்.பி உதயகுமார் கைது..!!