கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலைச் சேர்ந்த 35 வயது நிரம்பிய சபரிவர்மன் என்பவர் சட்டவிரோதமாகக் குட்கா விற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு, ஜூலை மாதம் 9-ஆம் தேதி கைது செய்யப்பட்டு, அம்மாவட்டத்திலுள்ள சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், கடந்த 13-ஆம் தேதி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தை சிபிஐக்கு மாற்றி விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. சபரி வர்மன் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தப்பட்டது.
இந்த நிலையில், நாகர்கோவிலில் சிறை கைதி சபரிவர்மன் கொலையில் அதிர்ச்சி தரும் கூறாய்வு அறிக்கை வெளியானது. கொடூரமான தாக்குதலால் வியாபாரி சபரி வர்மன் மூச்சு திணறி மரணம் அடைந்திருப்பதாக ரிப்போர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடலின் பல்வேறு பகுதிகளிலும் ரத்தக் கட்டுகள் மற்றும் உராய்வு காயங்கள் ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள் உறுப்புகளை பரிசோதித்ததில் மூளை மற்றும் அதன் ரத்த நாளங்கள் மற்றும் கல்லீரலில் வீக்கம் ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கயிறு அல்லது ஏதோ ஒரு பொருளால் கட்டப்பட்ட காயம் இருப்பதாகவும் இதயம் மற்றும் நுரையீரலின் மேற்பரப்பில் சிறிய ரத்தப் புள்ளிகள் இருப்பதாகவும் அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: “உடலை வாங்க தயார் ஆனால்...” - சபரிவர்மன் வீடு தேடி சென்ற தவெக அமைச்சர்களுக்கு உறவினர்கள் கொடுத்த ட்விஸ்ட்...!
சபரிவர்மனின் வலது கை மணிக்கட்டு பகுதியில் எலும்பு முறிந்து உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் தலையின் மேற்பகுதி கழுத்தின் பின்புற நடுப்பகுதியில் ஆழமான ரத்தக்கட்டுகள் இருப்பதாகவும் கூராய்வு அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியேறி உள்ளது. சபரி வர்மனின் மூக்கிலிருந்து ரத்தம் கலந்த திரவம் வெளியேறி இருந்தது என்று அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியானது.
இதையும் படிங்க: “கதற, கதற கட்டி வைத்து அடி... சக கைதிகள் செய்த கொடூரம்”... சிறைக்குள் சபரிவர்மனுக்கு நடந்தது என்ன?