கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தங்காடு பகுதியிலுள்ள சபரி வர்மன் வீட்டிற்கு வருகை தந்த மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் ஆகியோர் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்து 10.லட்ச ரூபாய் நிவாரணம் மற்றும் இலவச 2.சென்று வீட்டு மனை பட்டா ஊரக வளர்ச்சி முகமையில் தற்காலிக அரசு பணி ஆணை வழங்க முன்வந்த நிலையில் சபரி வர்மன் மனைவி மற்றும் உறவினர்கள் நிவாரணங்களை வாங்க மறுப்பு. அமைச்சர்களின் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் பரபரப்பு.
கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தங்காடு பகுதியை சேர்ந்த சபரி வர்மன் என்பவனை குட்கா விற்பனை செய்ததாக தென் தாமரைக்குளம் போலீஸார் கைது செய்து நாகர்கோவில் சிறையில் அடைத்த நிலையில் சிறை வார்டன் மற்றும் கைதிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்தார்
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய நேசமணிநகர் போலீஸார் சிறை வார்டன் 3 பேர் சிறை கைதிகள் 8 பேர் என 11 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்து சிறை வார்டன் 3 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்த நிலையில் சபரி வர்மன் உறவினர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து வியாழக்கிழமை 4 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதையும் படிங்க: “கதற, கதற கட்டி வைத்து அடி... சக கைதிகள் செய்த கொடூரம்”... சிறைக்குள் சபரிவர்மனுக்கு நடந்தது என்ன?
முதலமைச்சர் விஜய் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட வேண்டும் பிரேத பரிசோதனை அறிக்கையில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும் என்றும் கோரிக்கைகளை முன்வைத்து வந்தனர்
இந்நிலையில் பாதிக்கப்பட்ட சபரிவர்மன் குடும்பத்தினருக்கு அரசு தரப்பில் தற்காலிக அரசு வேலை, குழந்தைக்கு படிக்க உதவி,வீட்டுமனை 10 லட்ச ரூபாய் நிவாரணம் இலவச வீடு திட்டத்தில் வீடு கட்ட 3 லட்ச ரூபாய் வழங்கி ஆறுதல் கூறுவதற்காக தமிழக சுற்றுலா துறை அமைச்சர் ராஜேஷ்குமார் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் மாவட்ட ஆட்சியர் பிரதாப் மாவட்ட எஸ்.பி.ஸ்டாலின் ஆகியோர் சபரிவர்மன் வீட்டிற்கு சென்றனர்.
சபரி வர்மன் மனைவி ஆனந்தவல்லி, அவரது சகோதரி கௌதமி மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். பின்னர் சுமார் 20 நிமிடம் அமைச்சர்கள் உறவினர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது நிவாரணத்தை உறவினர்கள் வாங்க மறுத்துள்ளனர் இதனால் பேச்சுவார்தை தோல்வியடைந்ததால் வெளியே வந்த அமைச்சர்கள் குடும்பத்தினருடன் பேசியது குறித்தும் நிவாரண உதவிகள் வழங்கபட்டதா என்பதும் குறித்தும் செய்தியாளர்களிடம் பேசாமல் அவசர அவசரமாக காரில் ஏறி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தின் சார்பில் வழக்கறிஞர்கள் செய்தியாளர்களை சந்தித்து அளித்த விளக்கத்தில், பிரேத பரிசோதனை அறிக்கையில் 19 இடங்களில் ஏற்பட்ட காயங்களால் உயிரிழப்பு ஏற்படவில்லை என்று கூறப்பட்டுள்ளதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பிரேத பரிசோதனை வீடியோவை எங்களின் தரப்பு மருத்துவ குழுவிடம் வழங்கி ஆய்வு செய்வோம்.அதில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் மதுரை உயர்நீதிமன்ற கிளையை நாடுவோம். அதற்காக ஒரு நாள் அவகாசம் கேட்டுள்ளோம்.
அந்த அறிக்கையில் தவறு இல்லை என்றால் உடலை வாங்க தயாராக இருக்கிறோம்.பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு நிவாரணம் தர முன் வந்ததற்கு தமிழக முதல்வர் விஜய், அமைச்சர்கள், கலெக்டர், எஸ்பி ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் ஆனால் போலீஸார் உடலை வாங்க வற்புறுத்துவதாகவும் கால அவகாசம் வேண்டியே உடலை வாங்க மறுப்பு தெரிவித்துள்ளோம் எங்களது மருத்துவ குழுவின் பரிந்துரையை பொறுத்து உடலை வாங்குவது குறித்து முடிவெடுப்போம் எனவும் தெரிவித்தனர்
இதையும் படிங்க: நாகர்கோயில் கைதி மரணத்தில் திடுக் திருப்பம்... லிஸ்ட் போட்டு தூக்கப்பட்ட 8 பேர்... யார் என்பதில் தான் ட்விஸ்ட்டே...!