சென்னை பெரம்பூரில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட எம்.பி. திருச்சி சிவா பேசினார். அப்போது, காமராஜர் குறித்து கலைஞர் கருணாநிதி கூறியதாக சிலவற்றை திருச்சி சிவா பகிர்ந்து கொண்டார். மின் பற்றாக்குறை குறித்து தமிழகம் முழுவதும் காமராஜர் கண்டனம் தெரிவித்து இருந்தார். இருந்தாலும் அவருக்கு குளிர்சாதன வசதி இல்லையென்றால், உடலில் அலர்ஜி வந்துவிடும் என்பதற்காக அவர் தங்கும் விடுதி உட்பட அனைத்து அரசு பயணியர் விடுதிகளிலும் குளிர்சாதன வசதி ஏற்படுத்த கருணாநிதி உத்தரவிட்டதாக கூறினார்.
அவசரநிலை காலத்தில் காமராஜரை கைது செய்ய மத்திய அரசு முயன்றபோது, திருப்பதி செல்வதற்காக காமராஜர் திட்டமிட்டிருந்தார். திருப்பதி சென்றால், காமராஜரை கைது நடவடிக்கையில் இருந்து தன்னால் காப்பாற்ற முடியாது என்று கூறியதாக கருணாநிதி கூறியதாக பேசினார். மேலும், காமராஜரின் உயிர்பிரிகையில், கருணாநிதியின் கையைப் பிடித்துக்கொண்டு, நாட்டையும் ஜனநாயகத்தையும் கருணாநிதி காப்பாற்ற வேண்டும் காமராஜர் சொன்னதாக பேசி இருந்தார்.

எளிமையின் சிகரமாக வாழ்ந்து மறைந்த காமராசர் குறித்து திருச்சி சிவா இப்படி பேசி இருக்கக் கூடாது என்று கண்டனங்கள் வலுத்து வருகிறது. கர்மவீரர் காமராசர் குறித்து சச்சி விவாதங்கள் செய்வது சரி அல்ல என்ற முதலமைச்சர் கூறியிருக்கும் நிலையில், இதற்கு காரணமே திமுகவின் எம்பி தானே., என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. திருச்சி சிவாவின் இந்த பேச்சு உண்மைக்கு புறம்பானதாக இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ரவுடியை துடிக்கத் துடித்துக் கொன்ற கும்பல்..! 4 பேரை பிடித்து போலீஸ் தொடர் விசாரணை..!
இந்த நிலையில், சேலம் மாவட்டம் ஓமலூர் தமிழ் மாநில காங்கிரசார் திருச்சி சிவாவின் உருவ பொம்மையை எரித்து போராடினர். காமராஜர் குறித்து அவதூறு பரப்பியதாக கூறி திமுக எம்பி திருச்சி சிவாவின் உருவ பொம்மையை எரித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி சிவா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இதையும் படிங்க: பாமக MLA அருளுக்கு திடீர் நெஞ்சு வலி.. மருத்துவமனையில் தொடர் சிகிச்சை.. பாமகவினர் அதிர்ச்சி!