பணி நிரந்தரம் மற்றும் தனியார் மயமாக்குதல் எதிர்ப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் 13 வது நாளாக சென்னை ரிப்பன் மாளிகை அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி அறவழியில் போராடி வந்த தூய்மை பணியாளர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்தனர்.
அரசு தரப்பில் தூய்மை பணியாளர்களுடன் எட்டு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருப்பினும் சமூக உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் தொடர்ந்து போராடி வந்தனர்.
இதையும் படிங்க: யோவ்... அவங்க தேச விரோதிகளா? தூய்மை பணியாளர்கள் கைது… பாசிச திமுகவின் அராஜகம் என விஜய் கண்டனம்!
பொதுமக்களுக்கு இடையூறு செய்வதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டது. அதன்படி தூய்மை பணியாளர்களை அகற்றுவதற்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். நள்ளிரவில் குண்டு கட்டாக தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

13 நாட்களாக ரிப்பன் மாளிகை முன் போராடி வந்த தூய்மைப் பணியாளர்களை, நள்ளிரவு நேரம் பார்த்து பெரும் படையோடு ஸ்டாலின் அரசின் காவல்துறை கைது செய்திருப்பதாக அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
நீதிமன்ற உத்தரவில் நள்ளிரவில் கைது செய்யுங்கள் என்று சொல்லியிருக்கிறதா என்ன என்று கேள்வி எழுப்பியது.
இந்த அராஜகக் கைது செய்தியாகிவிடக் கூடாது என்பதற்காக இரவோடு இரவாக இந்த கீழ்த்தரமான வேலையை ஸ்டாலின் அரசு செய்துள்ளதாகவும்,தூய்மைப் பணியாளர்கள் கைது செய்துக் கொண்டிருந்த வேளையில், பொம்மை முதல்வர் திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்த காட்சி, நீரோ மன்னனை விட கொடூரமானவர் ஸ்டாலின் என்பதை காட்டிவிட்டது என்றும் கூறியுள்ளது.
பகை நாட்டுடன் போர் புரிவது போல ஒரு பெரும் படையை அனுப்பி இருக்கிறாரே ஸ்டாலின்., அவர்கள் என்ன தீவிரவாதிகளா என்றும் எளிய மக்கள் தானே எனவும் சாடியது.
ரிப்பன் மாளிகையில் இருந்து தூய்மைப் பணியாளர்களை நீங்கள் அகற்றியிருக்கலாம்., ஆனால், தமிழ்நாட்டை சூழ்ந்துள்ள குப்பையை இதே தூய்மைப் பணியாளர்கள் பெருக்கி, தூக்கி வீசப்போகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றும் கூறியுள்ளது.
இதையும் படிங்க: யோவ்... அவங்க தேச விரோதிகளா? தூய்மை பணியாளர்கள் கைது… பாசிச திமுகவின் அராஜகம் என விஜய் கண்டனம்!