சென்னை மாநகராட்சியின் 5 மற்றும் 6-வது மண்டலங்களில் (ராயபுரம் மற்றும் திரு.வி.க. நகர்) தூய்மைப் பணிகளை தனியார் நிறுவனத்துக்கு ஒப்படைக்கும் முடிவுக்கு எதிராக எழுந்த சர்ச்சையும், அதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனி நீதிபதி வழங்கிய உத்தரவும் தமிழகத்தில் பரவலான கவனத்தை ஈர்த்துள்ளன. இந்த விவகாரம், தூய்மைப் பணியாளர்களின் வேலைவாய்ப்பு உரிமைகள், தனியார்மயமாக்கல் கொள்கைகள் மற்றும் தொழிலாளர் நலன் தொடர்பான முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளது.
தூய்மை பணிகளை தனியாருக்கு ஒப்படைக்கும் முடிவை கைவிடக்கோரி வழக்கு தொடரப்பட்ட நிலையில், தனியாருக்கு ஒப்படைக்கும் முடிவுக்கு தடை விதிக்க தனி நீதிபதி மறுப்பு தெரிவித்தார். தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக உழைப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்கை இரு நீதிபதிகள் அமர்வு விசாரித்தது. அப்போது, தினசரி 2000 டன் குப்பைகள் தேங்கும் நிலையில் பணியாளர்கள் வராததால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தனியார் நிறுவனம் தரப்பில் வாதிடப்பட்டது.

பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதால், சென்னை 5,6 வது மண்டல ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணிக்கு திரும்ப விட்டால் வேறு ஆட்களை பணியமர்த்த நேரிடும் என்றும் தனியார் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: என் பையனோட குண்டாசை ரத்து பண்ணுங்க… பாலியல் குற்றவாளி ஞானசேகரன் தாய் மனுத்தாக்கல்!
உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது தனியார் நிறுவனம் முன்வைத்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், மேல்முறையீட்டு மனு குறித்து அரசு மற்றும் தனியார் நிறுவனம் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்டோபர் ஆறாம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இதையும் படிங்க: அது செல்லாது.. அதிமுக விதி திருத்ததிற்கு எதிராக CASE போட கூடாது.. ஹைகோர்ட் தடாலடி உத்தரவு..!