திருப்பூரில் மனிதக் கழிவுகளை எந்தவித உபகரணங்களும் இன்றி துப்புரவு பணியாளர் கைகளால் அல்ல வைத்த அவலம். கேள்வி கேட்டால் ஆப்ஷன் போடுவதாக உயர் அதிகாரிகள் மிரட்டுவதாக துப்புரவு பணியாளர் மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு.
திருப்பூர் மாநகராட்சியில் கடந்த 28 ஆண்டுகளுக்கும் மேலாகத் துப்புரவுப் பணியாளராகப் பணியாற்றி வருபவர் சந்திரன். இவர் தற்போது திருப்பூர் குமரன் பேருந்து நிலையப் பகுதியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகிறார். இப்பேருந்து நிலையத்திற்கு முன்பாகப் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இலவச சிறுநீர் கழிப்பிடம் ஒன்று அமைந்துள்ளது.
இங்கு இரவு நேரங்களில் பொதுமக்கள் சிலர் மலம் கழித்து விடுவதால், விடியற்காலையில் பணிக்கு வரும்போது அந்த இடம் முழுவதும் மனிதக் கழிவுகளால் நிறைந்து காணப்படுவதாகவும், "அந்தக் கழிவுகளை அள்ளுவதற்கோ அல்லது சுத்தம் செய்வதற்கோ மாநகராட்சித் தரப்பில் எந்தவிதமான பாதுகாப்பு உபகரணங்களோ, கருவிகளோ வழங்கப்படாத நிலையில் வெறும் கைகளால் அள்ளுமாறு மேஸ்திரி கோபால் என்பவர் வற்புறுத்தி வருகிறார். இதுகுறித்து ஆய்வாளரிடம் முறையிட்டபோது, 'விரைவில் சரிசெய்து தருகிறேன், அதுவரை சுத்தம் செய்' என்று கூறி மழுப்புகிறார்"
இதையும் படிங்க: தமிழ்நாடு அரசியல் செய்யுறாங்க... பழியை தூக்கிப் போட்ட டி. கே. சிவக்குமார்..!
மேலும், "இந்த சுகாதாரமற்ற வேலையைச் செய்ய மறுத்தால், பணிக்கு வந்திருந்தாலும் 'ஆப்சென்ட்' (விடுப்பு) போட்டுவிடுவதாக மேஸ்திரி கோபால் மிரட்டுகிறார். கடந்த ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நான் பணிக்கு வந்திருந்த நிலையிலும், எனக்கு இவ்வாறு விடுப்புப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி வெறும் கைகளால் மலத்தை அள்ளுவதால் தனக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் அப்போதும் கூட மேலதிகாரி கோபால் தன்னை விடாமல் அந்த பணியை திரும்பத் திரும்ப செய்ய சொல்லி வற்புறுத்துகிறார்.
எனக்கு 2 பெண் பிள்ளைகள் இருப்பதாகவும், இருவரும் முதுகலை மற்றும் இளங்கலை (M.Sc, B.Com) என உயர் கல்வி படித்து வருவதாகவும், தாம் செய்யும் இந்த அவல நிலை அவர்களுக்குத் தெரியக்கூடாது என்று நினைப்பதாகவும், தமக்கு நேரும் இந்த மன உளைச்சலுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் முறைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மாநகராட்சிப் பணியாளரே இத்தகைய புகாரை அளித்துள்ளது திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நாள் நட்சத்திரம் பாக்கணுமா..? வாயைத் திறங்க விஜய்..! விளாசிய TTV தினகரன்..!