பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் சமீப நாட்களுக்கு முன்பு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். தூய்மை பணிகளை தனியாருக்கு ஒப்படைக்க கூடாது என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அவர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என கூறப்பட்ட நிலையில், பல்வேறு முக்கிய அறிவிப்புகள் தூய்மை பணியாளர்களுக்காக வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டது. மேலும் மூன்று வேளையும் உணவு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. பல்வேறு சலுகைகள் தூய்மை பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்டன. காப்பீடு தொகை அதிகரிப்பு உள்ளிட்ட சலுகைகளும் பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்டது.
இருப்பினும் பணி நிரந்தரம் கோரி தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அண்ணா அறிவாலயம், கலைஞர் நினைவிடம் என பல இடங்களில் போராட்டம் நடத்தி தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். தங்களுக்கு பல சலுகைகள் அளித்தாலும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதை முதன்மை கோரிக்கை என்று கூறி வருகின்றனர். பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்த தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி ஆணையர் வீட்டை தூய்மை பணியாளர்கள் முற்றுகையிட்டனர்.
இதையும் படிங்க: தொடரும் தூய்மை பணியாளர்கள் போராட்டம்.. மாநகர ஆணையர் வீடு முற்றுகை... கொந்தளிப்பு...!
இந்த நிலையில் சாக்கடையை கையில் அள்ளி தூய்மை பணியாளர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். சென்னை மண்டலம் 5,6 ஐ சேர்ந்த தூய்மை பணியாளர்கள் கூவம் ஆற்றில் இறங்கினர். கூவத்தில் இறங்கி போராடிய தூய்மை பணியாளர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கைகளில் சாக்கடையை அள்ளி தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது.
இதையும் படிங்க: அண்ணா அறிவாலயம் முற்றுகை... டயருக்கு அடியில் படுத்து தூய்மை பணியாளர்கள் போராட்டம்... பதற்றம்...!