அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் வரும் ஐந்தாம் தேதி மனம் திறக்க உள்ளதாக பரபரப்பான தகவலை சொன்னார். அவர் கட்சியிலிருந்து விலகப் போகிறாரா அல்லது சசிகலா உள்ளிட்டோரை மீண்டும் அதிமுகவில் இணைக்கும் நடவடிக்கையில் ஈடுபடப் போகிறாரா என்ற கேள்வி எழுந்தது. தொடர்ந்து கட்சி நிர்வாகிகளை சந்தித்து செங்கோட்டைய ஆலோசனைகளை நடத்தி வருகிறார். இந்த நிலையில், அதிமுக முன்னாள் எம்.பி சத்திய பாமா செங்கோட்டையனை சற்று நேரத்தில் சந்திக்க உள்ளார்.
கோபிசெட்டிபாளையத்தில் உள்ள செங்கோட்டையன் வீட்டிற்கு வருகை தந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அதிமுக ஆட்சியில் அமர வேண்டும் என்றும் அதற்காக என்ன செய்ய வேண்டும் என்பது முக்கியம் என்றும் கூறினார். அதிமுக அணிகள் இணைய வேண்டும் என்பதை செங்கோட்டையனின் விருப்பம் என்று தெரிவித்தார்.
கட்சி நன்றாக இருக்க வேண்டும் மற்றும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதை பற்றி தான் செங்கோட்டையன் பேசிக்கொண்டே இருப்பார் என்று கூறினார். ஜெயலலிதா அம்மாவின் கனவை நினைவாக்க வேண்டும் என்று பேசிக்கொண்டே இருப்பார். எனவும் தெரிவித்தார். நல்லதே நடக்கும் எனவும் முன்னாள் எம்.பி சத்தியபாமா பேசினார்.

கடந்த 15 நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்ததால் நேற்றைய கூட்டத்தில் கலந்து கொள்ள வில்லை என்றும் 5ம் தேதி நடைபெற உள்ள கூட்டத்தில் கட்டாயமாக கலந்து கொள்வேன் எனவும் கூறினார். கட்சி நலன் சார்ந்து 2026 தேர்தல் வெற்றியை நோக்கி பயணிக்க வேண்டும் என்பது கருத்தாக இருக்கலாம் என்றும் எனக்கு முன் மூத்த நிர்வாகிகள் பலரும் உள்ள நிலையில், கட்சியில் உள்ள அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நினைக்கலாம் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: சின்னம்மா RETURNS! சசிகலா - செங்கோட்டையன் சந்திப்பு? பரபரக்கும் அரசியல் களம்..!
கட்சியில் அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்பது குறித்து தலைவர்கள் எடுக்கும் முடிவு தான். 5 ம் தேதி கட்சி நன்றாக இருக்க வேண்டும் நினைப்பவர்கள் கூட இருப்பேன் என்றார்.
இதையும் படிங்க: இப்படி சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்களே எடப்பாடி... அதிமுகவில் உதயமாகிறது 5வது அணி... அப்செட் மாஜி அதிரடி முடிவு...!