விருதுநகர் மாவட்டம் கம்பக்கோட்டையில் இருக்கக்கூடிய மடத்துப்பட்டியில் எக்ஸல் பட்டாசு ஆலை நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த பட்டாசு ஆலையில் இன்று வழக்கம்போல் சாலையில் தொழிலாளர்கள் பணியை துவக்கிய போது எதிர்பாராத விதமாக பயங்கர வெடிவிபத்து என்பது ஏற்பட்டிருக்கிறது. தொடர்ச்சியாக நான்கு முறை பயங்கரமாக வெடித்து சிதறியதால் ஒரு கடுமையான அதிர்வு என்பது ஏற்பட்டிருக்கிறது.
இதனால் அந்த பகுதியை சுற்றி இருக்கக்கூடிய சுமார் 6 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு கடுமையான அதிர்வு என்பது ஏற்பட்டதன் காரணமாக பொதுமக்கள் அனைவரும் பிதி அடைந்திருக்கிறார்கள். இதுகுறித்து உடனடியாக தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறைக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்துள்ளனர். தற்போது இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அங்கே உள்ளே சென்று கொண்டிருக்கிறது. ஆனாலும் கூட தொடர்ச்சியாக தற்போதும் பட்டாசுகள் வெடித்து சிதறிக் கொண்டிருப்பதால் உள்ளே செல்ல முடியாத ஒரு சூழல் என்பது ஏற்பட்டிருக்கிறது.
காலையில் தொழிலாளர்கள் வேலையை தொடங்கும் நேரம் என்பதால் உள்ளே ஏராளமான தொழிலாளர்கள் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும் அது குறித்தான முழுமையான தகவல் என்பது இதுவரை தெரியவில்லை. மீட்பு பணி துவங்கிய பின்னர் தான் எத்தனை தொழிலாளர்கள் உள்ளே சிக்கி இருக்கிறார்கள் பாதிப்பு குறித்த முழுமையான தகவல் தெரியவரும்.
தொடர்ச்சியாக பட்டாசுகள் வெடித்து சிதறிக் கொண்டிருப்பதன் காரணமாக அங்கு மீட்பு பணியை துவங்க முடியாத அளவிற்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. தற்போதும் கூட தீயணைப்பு துறையினர் உள்ளே செல்வதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகிறார்கள். அப்போது மீண்டும் பயங்கர வெடி சத்தம் கேட்டுள்ளது. இதனால் மீட்பு பணிகளை மேற்கொள்ள யாரும் உள்ளே போக முடியாத சூழ்நிலை நிலவுகிறது.
இதையும் படிங்க: டெக்னாலஜிதான்..! Hologram முறையை பயன்படுத்தி தவெகவினர் பரப்புரை..!!