தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வு தாள் தமிழ் மொழி குறித்த பெரும்பாலான கேள்விகள் தேர்வு பாடத்திட்டத்திற்கு அப்பால் இறந்ததாகவும் இதனால் தேர்வர்கள் கடினமான கேள்விகளை எதிர் கொள்ள இருந்ததாகவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார். திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, அரசுப்பணியாளர் தேர்வாணையம் தொடர்ந்து அலட்சியமாகச் செயல்பட்டு தேர்வர்களின் எதிர்காலத்தோடு விளையாடுவதாக கூறி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார் .
இந்த தேர்வினை ஏறத்தாழ 11 லட்சம் 50 ஆயிரம் தேர்வர்கள் எழுதியுள்ள நிலையில், வினாத்தாளில் ஆங்கிலமொழிப் பகுதி வினாக்கள் எளிதாகவும், தமிழ்மொழிப்பகுதி வினாக்கள் மிகக்கடினமானவும் இருந்ததால் தேர்வர்கள் பெரும் மனவுளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும், குறிப்பாக தமிழ்மொழிப் பகுதியில் பண்டைய ஓலைச்சுவடிகளில் இருந்தெல்லாம் கேள்விகள் கேட்கப்பட்டிருப்பது தேர்வர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.

தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர்கள் கூடத் தேர்ச்சி அடைய முடியாத அளவிற்கு கடினமான வினாக்கள் தமிழ்மொழி பகுதியில் இடம்பெற்றுள்ள நிலையில், ஆங்கிலப் பகுதி வினாக்கள் எளிதானதாக இடம்பெற்றுள்ளது தேர்வின் சமநிலையை முற்றாகச் சீர்குலைத்துள்ளது என்று குற்றம் சாட்டி உள்ள சீமான், இதனால் அரசு வேலை கனவோடு இராப்பகலாகக் கண்துஞ்சாது படித்து, கடின உழைப்பினை செலுத்திய தமிழிளம் தலைமுறை பிள்ளைகளின் எதிர்காலம் இருளாகி, மிகுந்த ஏமாற்றத்திற்கு ஆளாகி இருப்பதாக தெரிவித்தார்.
இதுதான் திராவிடம் மாடல் அரசா, தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை வழங்கும் முறை இதுதானா, தமிழ் மொழி களிக்கும் முக்கியத்துவம் இதுதானா என அடுக்கடுக்கான கேள்விகளை சீமான் வைத்தார். எனவே குரூப் 4 தேர்வில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளுக்கு தமிழக அரசு பொறுப்பேற்று தேர்வின் சமநிலை மற்றும் நடுநிலைத் தன்மையை காக்கும் விதமாக நடந்து முடிந்த தீர்வை ரத்து செய்துவிட்டு மறு தீர்வு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். எதிர்காலத்தில் எந்த ஒரு அரசு பணியாளர் தேர்வில் இது போன்ற குளறுபடிகள் ஏற்படாத வகையில் மிக கவனமாக தமிழக அரசு செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: பரந்தூர்-ல காட்டுற ஆர்வத்துல ஒரு பங்கையாச்சு விவசாயிகள் மேல காட்டுங்க! விளாசிய சீமான்
இதையும் படிங்க: கட்சி கொடியில் குழப்பம் வரும்... நாதக-வை விஜய் பின்பற்றுவதில் மகிழ்ச்சி... சீமான் சுவாரஸ்ய தகவல்!!