தமிழ் தேசியத்தை முன்னிறுத்தி சீமான் தனது அரசியல் பயணத்தை தொடர்ந்து வருகிறார். பல்வேறு சமூகப் பிரச்சினைகளை முன்னிறுத்தி பேசுவார். ஒவ்வொரு பிரச்சினையிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சீமான் களத்தில் நிற்பதை பார்த்திருப்போம். அதேபோல், திராவிடம் என்ற பாரம்பரியத்தின் மையத்தில், ஒரு வேறுபட்ட குரல் எழுந்தது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அவரது திராவிடத்துடனான முரண், வெறும் கொள்கை வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது.
அது தமிழர் அடையாளத்தின் அடிப்படையை மீண்டும் வரையறுக்கும் ஒரு தீவிரமான முயற்சியாக பார்க்கப்படுகிறது. சீமானின் இந்த நிலைப்பாடு, திராவிடத்தை போலி கோட்பாடு என்று குற்றம்சாட்டி, அதன் ஆழமான சமூக-அரசியல் பாதிப்புகளை அம்பலப்படுத்த முயல்கிறது. சீமானின் அரசியல் பயணம், திராவிட இயக்கத்தின் செல்வாக்கிலிருந்து தொடங்கியது. ஆனால், காலம் செல்லச் செல்ல, சீமானின் பார்வை மாறியது.

திராவிடம் தமிழின் தனித்தன்மையை மறைக்கிறது என்று அவர் விமர்சித்து வருகிறார். பல்வேறு சமூகப் பிரச்சினைகளை முன்னிறுத்தி சீமான் பேசுவது வழக்கம். இந்த நிலையில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சென்னை திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த நவம்பர் மாதம் செய்தியாளர் சந்திப்பின் போது எல்லாமே கோர்ட் பார்த்துக்கனும்னா., சட்டமன்றமும் பாராளுமன்றமும் பல்லாங்குழி ஆடவா என சீமான் பேசியிருந்தார்.
இதையும் படிங்க: கச்சத்தீவு கேடுகெட்ட நாடகம்… முதல்வரா போஸ்ட் மாஸ்டரா? பூந்து விளாசிய சீமான்…!
சீமானின் பேச்சுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அலெக்ஸாண்டர் சார்லஸ் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சீமான் மீது வழக்கு பதிவு செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சீமான் மீது அவதூறு பரப்புதல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஸ்டாலின் ஐயா... திராவிடம்னா என்ன? முதல்வருக்கு சீமான் சரமாரி கேள்வி...!