திராவிடம் என்ற பாரம்பரியத்தின் மையத்தில், ஒரு வேறுபட்ட குரல் எழுந்தது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அவரது திராவிடத்துடனான முரண், வெறும் கொள்கை வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது. அது தமிழர் அடையாளத்தின் அடிப்படையை மீண்டும் வரையறுக்கும் ஒரு தீவிரமான முயற்சியாக பார்க்கப்படுகிறது.
சீமானின் இந்த நிலைப்பாடு, திராவிடத்தை போலி கோட்பாடு என்று குற்றம்சாட்டி, அதன் ஆழமான சமூக-அரசியல் பாதிப்புகளை அம்பலப்படுத்த முயல்கிறது. சீமானின் அரசியல் பயணம், திராவிட இயக்கத்தின் செல்வாக்கிலிருந்து தொடங்கியது. ஆனால், காலம் செல்லச் செல்ல, சீமானின் பார்வை மாறியது. திராவிடம் தமிழின் தனித்தன்மையை மறைக்கிறது என்று அவர் விமர்சித்தார்.

இந்த முரண், சமீப காலங்களில் மிகவும் தீவிரமடைந்துள்ளது. சீமானின் திராவிட் எதிர்ப்பு கொள்கை தமிழக அரசியலில் புதிய பாதையை அமைத்து அழைத்து செல்கிறது. திராவிடம் என்றால் என்ன என்று முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். தமிழர் அல்லாதோர் தமிழ்நாட்டை ஆளுவதற்கு பாதுகாப்பாக வாழ்வதற்கு கொண்டுவரப்பட்டதே திராவிடம் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: கள்ளச்சாராயம் குடிச்சு செத்தா ரூ.10 லட்ச தரீங்களே? மின்னல் தாக்கி பலியான பெண்களுக்கு நிதி வழங்க சீமான் வலியுறுத்தல்..!
தமிழ்நாட்டு மக்கள் அரசியல் தெளிவு பெற்று வாக்கு அளிக்காத வரை திராவிட கதைகளை சொல்லிக்கொண்டு தான் இருப்பார்கள் எனவும் சீமான் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இளம் தலைமுறையினர் அரசியல் தெளிவு பெற்று வருகின்றனர் என்றும் அவர் கூறினார். இணையம் வளர்ந்து வரும் காலத்தில் மீனவர் பிரச்சனைக்கு இன்னும் கடிதம் எழுதிக் கொண்டிருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலினை விமர்சனம் செய்துள்ளார்.
இதையும் படிங்க: கரூர் விசாரணையில் தமிழர்கள் வேண்டாமா? இதையே மணிப்பூர் மக்கள் ஏத்துப்பாங்களா… சீமான் ஆதங்கம்…!