கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே கழுதூர் கிராமத்தில் வயலில் களை எடுக்கும் பணி செய்து கொண்டிருந்த நான்கு சகோதரிகள் மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் ஒரு பெண்ணுக்கு கண்பார்வை பறிபோனது. இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டிய சீமான் இறந்தவர்களுக்கு துயர்துடைப்பு நிதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். உயிரிழந்த பெண்களுக்கு தலா 50 லட்ச ரூபாயும் பார்வை இழந்த பெண்ணுக்கு 25 லட்ச ரூபாய் தூய துடைப்பு நிதி வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மின்னல் தாக்கி கனிதா, பாரிஜாதம், சின்ன பொண்ணு, அரியநாச்சி ராஜேஸ்வரி ஆகிய 4 சகோதரிகள் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதுடன், சகோதரி தவமணியின் கண்பார்வை பறிபோன பெருந்துயரச் செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்ததாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

எதிர்பாராத இயற்கை பாதிப்பில் உயிரிழந்த பெண்களின் குடும்பத்தினருக்கு ஆறுதுறை தெரிவித்து துயரத்தில் பங்கெடுப்பதாக கூறியுள்ளார். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கும், கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கும் தலா 10 இலட்சம் இழப்பீடுஅறிவித்த திராவிட மாடல் திமுக அரசு, மக்கள் பசி தீர்க்கும் உயர் வேளாண் பணியில்
இதையும் படிங்க: கரூர் விசாரணையில் தமிழர்கள் வேண்டாமா? இதையே மணிப்பூர் மக்கள் ஏத்துப்பாங்களா… சீமான் ஆதங்கம்…!
ஈடுபட்டிருந்தபோது, இயற்கை சீற்றத்தால் தங்கள் இன்னுயிரை இழந்துள்ள பெண்களின் குடும்பத்தினருக்கு தலா 50 லட்ச ரூபாயும், பார்வை இழந்தவருக்கு 25 லட்சமும் துயர்துடைப்பு நிதியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த துயத்துடிப்பு நிதியை வழங்கி அவர்களின் குடும்பத்தை சூழ்ந்துள்ள துயரிலிருந்து மீள்வதற்கு உதவ வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்... DGP அலுவலகத்துக்குப் பறந்த மெயில்...!