• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 15, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    சிபில் ஸ்கோர் அடிப்படையில் விவசாயிகளுக்கு கடனா? ஏன்? தமிழக அரசுக்கு சீமான் கேள்வி!!

    சிபில் ஸ்கோர் அடிப்படையிலேயே விவசாயிகளுக்கு கடன் வழங்கப்படும் என்ற அரசின் அறிவிப்பு கண்டனத்துக்குரியது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
    Author By Raja Wed, 11 Jun 2025 16:29:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Seeman has said that the govt's announcement that loans will be provided to farmers based on CIBIL scores is condemnable

    பாஜக அரசின் திட்டங்களை தமிழ்நாட்டில் அனுமதிக்கமாட்டோம் என்று கூறிவிட்டு, மறைமுகமாக நடைமுறைப்படுத்தும் திராவிட மாடல் தில்லுமுல்லுகளில் இதுவும் ஒன்றா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூட்டுறவு வங்கிகளில் நுகர்வோர் கடன் மதிப்பெண் அடிப்படையிலேயே விவசாயிகளுக்கு கடன் வழங்கப்படும் என்ற தமிழ்நாடு அரசின் புதிய அறிவிப்பு வன்மையான கண்டனத்துக்குரியது.  கடந்த 26.05.2025 அன்று தமிழ்நாடு கூட்டுறவுத் துறை பதிவாளர் விவசாயிகளுக்கு வணிக வங்கிகள் பின்பற்றுகிற நடைமுறையின்படி, இனி கூட்டுறவு கடன் பெறும் விவசாயிகளின் சிபில் ஸ்கோர் (CIBIL Score) மதிப்பெண் பார்த்து தகுதி உள்ளோருக்கு மட்டுமே இனி வேளாண் கடன் வழங்கிட வேண்டுமென உத்தரவைப் பிறப்பித்துள்ளது விவசாய பெருமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி நகைக்கடன் தொடர்பாகப் புதிதாகப் பிறப்பித்த 9 விதிகள் கூட்டுறவு துறையைக் கட்டுப்படுத்தாது என தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் அவர்கள் கூறியிருந்த நிலையில், அமைச்சரின் அறிவிப்புக்கு மாறாக அதே துறையின் தலைமை அலுவலர் ரிசர்வ் வங்கி விதிமுறையைப் பின்பற்றி இப்படி ஒரு அறிவிப்பு வெளியிட்டது எப்படி? இது அமைச்சருக்குத் தெரியாமல் வெளியிடப்பட்டதா? அல்லது அமைச்சரின் உத்தரவின் பேரில் வெளியிடப்பட்டதா?

    cibil score

    அல்லது இந்திய ஒன்றிய பாஜக அரசின் திட்டங்களை தமிழ்நாட்டில் அனுமதிக்கமாட்டோம் என்று கூறிவிட்டு, மறைமுகமாக நடைமுறைப்படுத்தும் திராவிட மாடல் தில்லுமுல்லுகளில் இதுவும் ஒன்றா? இந்திய ரிசர்வ் வங்கியே மக்களுக்கு எதிரான தன்னுடைய புதிய நடைமுறையைத் திரும்ப பெற்றுவிட்ட நிலையில், தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு எதிரான இத்தகைய கடுமையான விதிமுறையை விதித்திருப்பது ஏன்? ரிசர்வு வங்கி விதிமுறைகள் வேளாண் கூட்டுறவு வங்கிகளைக் கட்டுப்படுத்தாது என்று கூறிய தமிழ்நாடு அரசு, தற்போது வணிக வங்கிகளுக்கான நடைமுறையை கூட்டுறவு வங்கிக்குப் பொருத்துவது முறைதானா? வேளாண் கடன் பெற்ற விவசாயிகள் அக்கடனைத் திருப்பி செலுத்தும் கணக்கீடான சிபில் ஸ்கோர் மதிப்பெண்களின் அளவீடு தான் விவசாயிகள் கடன் பெறுவதற்கான தகுதியாகத் தீர்மானிக்கப்படும் என்றால் இலட்சக்கணக்கான ஏழை எளிய விவசாயிகள், இனி வேளாண் கடன் பெறவே முடியாது. இது வேளாண்மையை அழித்தொழித்து, விவசாயிகள் வேளாண்மையை விட்டே வெளியேற்றுகின்ற கொடுஞ்செயலாகும். தொழில் முனைவோருக்குக் கடன்கொடுக்க, வணிக வங்கிகள் இலாப நோக்கோடு கையாளும் சிபில் ஸ்கோர் கணக்கீடுகளை, வேளாண் பணிகளைத் தடையின்றி செய்வதற்கு ஏதுவாக சேவை மனப்பான்மையோடு விவசாயிகளுக்கு வழங்கும் கடன்களுக்கு விதிப்பது முறைதானா? இதரப் பணிகளைப்போல வேளாண்மை ஒரு தொழிலல்ல; அது ஒரு வாழ்வியல் என்பது திமுக அரசுக்கு தெரியாதா?

    இதையும் படிங்க: 35 புதிய கல்லூரிகள்; பேராசிரியரை நியமிக்காத திமுக அரசு... கழுவி ஊற்றிய அன்புமணி!!

    cibil score

    விவசாயிகள் வெயிலிலும் மழையிலும் அரும்பாடுபட்டு பல தடைகளைக் கடந்து விளைவிக்கும் விளைப்பொருட்களை நம்பியே உலகில் மனிதர்கள் வாழ்ந்து வருகின்றன. உழவர்கள் கைம்மடங்கி படுத்துவிட்டால், உலகத்தை துறந்த துறவிகளுக்கும் உணவு கிடைக்காத அவலநிலை ஏற்படும் என்பதாலேயே 'சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்' என்கிறார் தமிழ்மறை இயற்றிய வள்ளுவப்பெரும்பாட்டன். மற்ற தொழில்களைப் போல விவசாயம் என்பது மாதா மாதம் லாபம் ஈட்டும் தொழிலுமல்ல; ஐந்தாறு மாதங்கள் ஓய்வின்றி உழைத்து, இயற்கையும் துணை புரிந்தால் மட்டுமே வெள்ளாமை வீடு வந்து சேர்ந்து சிறிதளவாவது லாபம் கிடைக்கும் அதுவும் அரசின் கொள்முதல் விலை, சந்தையின் விற்பனை விலையை பொறுத்ததாகும். அத்தகைய நிலையில், ஒவ்வொரு மாதமும் கடனைத் திருப்பிச்செலுத்தும் முறையை வைத்துத்தான் இனி கடன் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவிப்பது உழவினை முடக்கும் சிறிதும் அறமற்ற கொடுஞ்செயலாகும். ஏற்கனவே வறட்சி, புயல், மழை வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்காமலும், விதைகள், உரங்கள், வேளாண் இடுபொருட்கள் ஆகியவற்றின் விலையைக் கட்டுக்குள் வைக்காமல் பன்மடங்கு அதிகரிக்கச் செய்தும் வேளாண் பெருங்குடி மக்களை ஒன்றிய, மாநில அரசுகள் வாட்டி வதைத்து வருகின்றன.

    cibil score

    இத்தனை தடைகளையும் தாண்டி விவசாயிகள் விளைவித்த பயிர்களுக்கு உரிய விலை வழங்காமலும் ஏமாற்றி வருகின்றன. மேலும், நாற்று நடுதல், களை எடுத்தல், அறுவடை செய்தல் உள்ளிட்ட அடிப்படையான வேளாண் பணிகளுக்குக் கூட ஆள் கிடைக்காத அவலச் சூழல் நிலவுவதால் விவசாயிகள் வேளாண்மையைக் கைவிட வேண்டிய நெருக்கடியானச் சூழலை நோக்கித் தள்ளப்பட்டுள்ளனர். அதிலும் கடன் வாங்கித்தான் வேளாண்மை செய்ய முடியும் என்ற அவலநிலையில் விவசாயிகளை வைத்துவிட்டு, அப்படி கடன் வழங்கவும் புதிய விதிமுறைகள் என்ற பெயரில் திமுக அரசு கட்டுப்பாடு விதிப்பது, விவசாயிகள் முற்று முழுதாக வேளாண்மையைக் கைவிடுகின்ற பேராபத்தான சூழலை ஏற்படுத்தும். இது மிகப்பெரிய பஞ்சம் ஏற்பட்டு விலைவாசி உயரவும், மக்கள் பசியால் மடியவுமே வழிவகுக்கும். இதற்குப் பெயர்தான் திராவிட மாடலா? இதுதான் விவசாயிகளையும் வேளாண்மையையும் பாதுகாக்கும் முறையா? ஆகவே, வேளாண்மையை அழித்தொழிக்கும் வகையில் தமிழ்நாடு கூட்டுறவு வங்கிகளில் இனி நுகர்வோர் கடன் மதிப்பெண் (சிபில் ஸ்கோர்) அடிப்படையில் கடன் வழங்கப்படும் என்ற உத்தரவை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: 5 வருஷத்துல ரூ.840 கோடி போச்சு... தமிழக அரசு தான் காரணம்... அன்புமணி பகீர் குற்றச்சாட்டு!!

    மேலும் படிங்க
    உள்ளூர் பிரச்சனை சந்தி சிரிக்க...உலகப்போர் Commentary ஒரு கேடா...விளாசிய அதிமுக !

    உள்ளூர் பிரச்சனை சந்தி சிரிக்க...உலகப்போர் Commentary ஒரு கேடா...விளாசிய அதிமுக !

    தமிழ்நாடு
    ஆட்சி செய்யும் உரிமையை திமுக இழந்துவிட்டது... அன்புமணி ஆவேசம்!

    ஆட்சி செய்யும் உரிமையை திமுக இழந்துவிட்டது... அன்புமணி ஆவேசம்!

    அரசியல்
    அம்பேத்கரை ஏற்றுக்கொண்ட எவனும் இதற்கு பணியமாட்டான்... மாஸ் காட்டிய திருமாவளவன்!!

    அம்பேத்கரை ஏற்றுக்கொண்ட எவனும் இதற்கு பணியமாட்டான்... மாஸ் காட்டிய திருமாவளவன்!!

    அரசியல்
    தீவிரமடையும் இஸ்ரேல் - ஈரான் போர்.. உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.. ஸ்டாலின் ட்வீட்!!

    தீவிரமடையும் இஸ்ரேல் - ஈரான் போர்.. உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.. ஸ்டாலின் ட்வீட்!!

    தமிழ்நாடு
    உங்கள் சம்பளம் 25 ஆயிரம் இருந்தாலும்.. நீங்கள் எளிதாக ரூ.1 கோடியை சம்பாதிக்கலாம்..!!

    உங்கள் சம்பளம் 25 ஆயிரம் இருந்தாலும்.. நீங்கள் எளிதாக ரூ.1 கோடியை சம்பாதிக்கலாம்..!!

    மியூச்சுவல் ஃபண்ட்
    எங்களை ஒதுக்கப் பார்த்தாலும் நாங்களே மையம்... சூசகமாக பேசிய திருமாவளவன்!!

    எங்களை ஒதுக்கப் பார்த்தாலும் நாங்களே மையம்... சூசகமாக பேசிய திருமாவளவன்!!

    அரசியல்

    செய்திகள்

    உள்ளூர் பிரச்சனை சந்தி சிரிக்க...உலகப்போர் Commentary ஒரு கேடா...விளாசிய அதிமுக !

    உள்ளூர் பிரச்சனை சந்தி சிரிக்க...உலகப்போர் Commentary ஒரு கேடா...விளாசிய அதிமுக !

    தமிழ்நாடு
    ஆட்சி செய்யும் உரிமையை திமுக இழந்துவிட்டது... அன்புமணி ஆவேசம்!

    ஆட்சி செய்யும் உரிமையை திமுக இழந்துவிட்டது... அன்புமணி ஆவேசம்!

    அரசியல்
    அம்பேத்கரை ஏற்றுக்கொண்ட எவனும் இதற்கு பணியமாட்டான்... மாஸ் காட்டிய திருமாவளவன்!!

    அம்பேத்கரை ஏற்றுக்கொண்ட எவனும் இதற்கு பணியமாட்டான்... மாஸ் காட்டிய திருமாவளவன்!!

    அரசியல்
    தீவிரமடையும் இஸ்ரேல் - ஈரான் போர்.. உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.. ஸ்டாலின் ட்வீட்!!

    தீவிரமடையும் இஸ்ரேல் - ஈரான் போர்.. உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.. ஸ்டாலின் ட்வீட்!!

    தமிழ்நாடு
    எங்களை ஒதுக்கப் பார்த்தாலும் நாங்களே மையம்... சூசகமாக பேசிய திருமாவளவன்!!

    எங்களை ஒதுக்கப் பார்த்தாலும் நாங்களே மையம்... சூசகமாக பேசிய திருமாவளவன்!!

    அரசியல்
    அமித் ஷாவுடன் வைரலான போட்டோ... மிளகாய் பொடி வெங்கடேசனை தூக்கியடித்த பாஜக...!

    அமித் ஷாவுடன் வைரலான போட்டோ... மிளகாய் பொடி வெங்கடேசனை தூக்கியடித்த பாஜக...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share