தமிழக அரசியல் களத்தில் புதிய சக்தியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகத்தின் வருகை, நாம் தமிழர் கட்சியின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது என்பதை வெளிப்படையாகப் பேசியவர் நாஞ்சில் சம்பத். த.வெ.கவின் பரப்புரை செயலாளராக இருக்கும் அவர், பல்வேறு பொதுக்கூட்டங்களில் சீமானையும் அவரது கட்சியையும் கடுமையாக விமர்சித்தார். இந்த விமர்சனங்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
பல இடங்களில் நடைபெற்ற த.வெ.க கொள்கை விளக்கப் பொதுக்கூட்டங்களில் பேசிய நாஞ்சில் சம்பத், த.வெ.க தலைவர் விஜயின் வருகை தமிழக அரசியலை மாற்றியமைக்கும் சக்தி வாய்ந்தது என வலியுறுத்தினார். இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள், மீனவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் ஆதரவு த.வெ.கவுக்கு இருப்பதாகக் கூறிய அவர், நா.த.கவின் நிலை குறித்து கடுமையான கருத்துகளை முன்வைத்தார்.

“த.வெ.க வருகையால் நா.த.க இன்றைக்கு கல்லறை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. அடுத்த தேர்தலில், குறிப்பாக 2029 பாராளுமன்றத் தேர்தலில், அந்தக் கட்சி தமிழ்நாட்டில் உயிரோடு இருக்காது” என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்தார். சீமானை “சின்னப்பையன்”, “சில்லறை” என விமர்சித்த அவர், அவரது கட்சி தமிழக அரசியலில் ஒரு தற்காலிக நிகழ்வாக மட்டுமே இருந்துவிட்டு மறைந்துவிடும் எனக் கூறி இருந்தார்.
இதையும் படிங்க: வெறும் ₹1.75 லட்சத்தில் எம்.எல்.ஏ ஆன ஒரே கட்சி தவெக தான்! மதுராந்தகத்தில் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பெருமிதம்!
இந்த நிலையில், த.வெ.க வருகையால் நா.த.க கல்லறைக்குள் சென்றுகொண்டிருக்கிறது என நாஞ்சில் சம்பத் விமர்சித்துள்ளார். அடுத்த தேர்தலில் அந்தக்கட்சி உயிரோடு இருக்காது என்றும் சீமானை கடுமையாக நாஞ்சில் சம்பத் சாடியுள்ளார்.
இதையும் படிங்க: 2029 தேர்தலுக்கான ராகுலின் மாஸ்டர் பிளான்? விஜயை மையமாக வைத்து புதிய வியூகம்!